பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

சங்க இலக்கியத்

மானதென்றும், இதன் வடிவமைப்பு கிளியின் மூக்குப் போன்று வளைவானது என்றும், இக்கொடி புதரில் ஏறிப் படரும் என்றும் புலவர்கள் கூறுவர்.

“அவரைப் பைம்பூப் பயில அகல்வயல்
 .... .... .... .... .... .... .....
 இதர்சினை தூங்கும் அற்சிர அரைநாள்”

-அகநா. 294 : 9-11

“பைந்நனை அவரை பவழங் கோப்பவும்”-சிறுபா. 164

“பனிப்புதல் இவர்ந்த பைங்கொடி அவரை
 கிளிவாய் ஒப்பின ஒளிவிடு பன்மலர்”
-குறுந். 240

இதனைக் கொண்டு அவரையைக் ‘கிளிமூக்கு மலர்’ என்பார் கோவை இளஞ்சேரனார்.[1] அவரையில் வெளிர் நீலமான நீலமணி போன்ற பூவுடைய கொடியுமொன்றுண்டு என்பர் மாங்குடி மருதனார்.

“மணிப்பூ அவரைக் குரூஉத்தளிர் மேயும்
 ஆமா கடியும் கானவர் பூசல்”
-மதுரை. 292-293

அவரை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே-ரோசேலீஸ். அகவிதழ் இணையாதவை.
தாவரக் குடும்பம் : பாப்பிலியோனேட்டே (Papilionatae)
தாவரப் பேரினப் பெயர் : டாலிகஸ் (Dolichus)
தாவரச் சிற்றினப் பெயர் : லாப்லாப் (lablab)
சங்க இலக்கியப் பெயர் : அவரை
உலக வழக்குப் பெயர் : அவரை
 

  1. இலக்கியம் ஒரு பூக்காடு: பக்: 685