பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

மராஅம்–வெண்கடம்பு
ஆன்தோசெபாலஸ் இன்டிகஸ்
(Anthocephalus indicus, Rich.)

கபிலர் குறிஞ்சிப்பாட்டில் (85) ‘பாங்கர் மராஅம் பல்பூந் தணக்கம்’ என்றார். ‘மராஅம்’ என்ற இச்சொல், சங்க இலக்கியங்களில் எல்லாம் அளபெடை பெற்றே வருவது இதன் சிறப்பியல்பு போலும்! மராஅம் என்பது பொதுவாக வெண்கடம்பு, செங்கடம்பு ஆகிய இரண்டையும் குறிக்குமாயினும் சிறப்பாக வெண்கடம்ப மரத்தையே குறிக்கின்றது. இது ‘மரவம்’ என்றும் குறிப்பிடப்படுகின்றது. மேலும் ‘சுள்ளி’ என்று கபிலர் குறிப்பிடும் மரத்திற்கு ‘மராமரம்’ என்று நச்சினார்க்கினியர் உரை கூறுவர். ஆகவே ‘மராஅம்’ என்பது பொதுவாக வெண்கடம்பு என்றும், இதற்குச் ‘சுள்ளி’, ‘மராமரம்’ என்ற பெயர்களும் உண்டென்றும் அறியலாம்.

சங்க இலக்கியப் பெயர் : மராஅம்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : மரவம், மரா, சுள்ளி, கடம்பு
பிற்கால இலக்கியப் பெயர் : கடம்பை, மராமரம்
உலக வழக்குப் பெயர் : வெண்கடம்பு, வெள்ளைக்கடம்பு
தாவரப் பெயர் : ஆன்தோசெபாலஸ் இன்டிகஸ்
(Anthocephalus indicus, Rich.)
முன்னைய தாவரப் பெயர் : ஆன்தோசெபாலஸ் கடம்பா
(Anthocephalus cadamba, Mig.)

மராஅம்–வெண்கடம்பு இலக்கியம்

‘பாங்கர் மராஅம் பல் பூந் தணக்கம்’ என்பது கபிலர் கூற்று (குறிஞ். 85). பத்துப் பாட்டிலும் கலித்தொகையிலும் பத்திடங்-