பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

379

கொண்டு ஆநிரைகளைக் கவரச் செல்லும் வீரர்களது தோற்றம் செவ்வானம் செல்வது போன்று இருக்குமாம்.[1]

வெட்சிப் பூக்களைப் பிற பூக்களுடன் இடையிடையே தொடுத்துக் கட்டி, தலையில் அணிவர் என்றும், விடு பூவாகத் தூவுவர் என்றும், வெட்சி மலர்க்கால் செவ்வியது என்றும் கூறப் படுகின்றது.

“செங்கால் வெட்சித் சீறிதழ் இடையிடுபு”-திருமுரு. 21

“வெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇ”
-புறநா. 100 : 5
“ஈர்அமை வெட்சி இதழ்புனை கோதையர்
 தார்ஆர் முடியர் தகை கெழுமார்பினர்”

-பரி. 22 : 22-23


வெட்சி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : இன்பெரே (Inferae) அகவிதழ் இணைந்தவை. சூலகம் பூவுறுப்புக்களுக்கு அடியில் இருக்கும்.
தாவரக் குடும்பம் : ரூபியேசி (Rubiaceae)
தாவரப் பேரினப் பெயர் : இக்சோரா (1xora)
தாவரச் சிற்றினப் பெயர் : காக்சினியா (coccinea)
சங்க இலக்கியப் பெயர் : வெட்சி
உலக வழக்குப் பெயர் : வெட்சி: தொட்டி எனவும் வழங்கப்படுமென்பர் காம்பிள்.
தாவர இயல்பு : பெரிய புதர்ச் செடி, நன்கு தழைத்து வளரும்.
இலை : தனி இலை, எதிரடுக்கில் அமைந்திருக்கும் தடித்த, பசிய, அகன்று நீண்ட இலைகளுக்கு இடையில் இலையடிச் செதில்கள் உள்ளன.
 

  1. புறத்திரட்டு. 752