பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

486

சங்க இலக்கியத்

கணவிரம்—செவ்வலரி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : அப்போசைனேசி
தாவரப் பேரினப் பெயர் : நீரியம் (Nerium)
தாவரச் சிற்றினப் பெயர் : இன்டிகம் (indicum)
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : அலரி, கணவிரை. கணவீரம்
பிற்கால இலக்கியப் பெயர் : அடுக்கு, அலரி
ஆங்கிலப் பெயர் : ஒலியாண்டர் (Oleander)
தாவர இயல்பு : புதர்ச் செடி. 3-4 மீட்டர் உயரமாக அடர்ந்து வளரும். நான்கு வகைகள் காணப்படுகின்றன.
தாவர வளரியல்பு : சீரோபைட் (Xerophyte) பாலை நிலத்தில் வளரும்.
இலை : சிறு காம்புள்ளது. மூவிலைத் தொகுப்படுக்கு நீளமானது. 10-16.5 செ.மீ. நீளமும், 2-2.5 செ.மீ. அகலமும், அடியிலும், நுனியிலும் வர வரக் குறுகி இருக்கும். நுனி கூரியது. தோல் போன்றது. பசிய நிறம். நடு நரம்பு மஞ்சள் நிறமானது.
மலர் : இதன் மலரைக் கொண்டு இவற்றில் ஐந்து செடிகளாகக் காணலாம். மலர்க்குழல் மிகச் சிறியது.
  1. சிவப்பு. 3 அடுக்கானது. அகவிதழ்கள் ஒவ்வொரு அடுக்கிலும் 5 இதழ்கள் சிறியவை.
  2. சிவப்பு. 5 அகவிதழ்கள் மட்டும்.