பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/731

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

715

கைதை—தாழை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : நூடிபுளோரே
தாவரக் குடும்பம் : பாண்டேசி
தாவரப் பேரினப் பெயர் : பாண்டனஸ் (Pandanus)
தாவரச் சிற்றினப் பெயர் : டெக்டோரியஸ் (tectorius)
தாவர இயல்பு : 25 அடி உயரமாகவும், கிளைத்தும் வளரும் புதர்ச் செடி. சிறு மரமென்றுங் கூறுவர்.
சங்க இலக்கியப் பெயர் : கைதை
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : தாழை
பிற்கால இலக்கியப் பெயர் : கைதை, முண்டகம், முடங்கல், முரலி
ஆங்கிலப் பெயர் : ஸ்குறுபைன் (Screw-pine)
தாவர வளரியல்பு : மீசோபைட். பெரும்பாலும் கடலோரப் பகுதியிலும், உப்பங்கழியிலும் வளரும்.
இலை : பசியது. மிக நீளமானது. 3-5 அடி வரையிலும் காணப்படும். அகலம் 1-2 அங்குலம். இலை விளிம்பில், மேல் நோக்கிய கூரிய முட்கள் நெருங்கி இருக்கும். இலையின் நடுநரம்பில், பின் நோக்கிய முட்கள் காணப்படும்.
மடல் : இரு பாலான பாளைகள் உண்டாகும். ஆண் பாளை நீண்டு கூரியது. 5-24 அங். வரையிலான மூடிய மடல்களையுடைய ஆண் பூ உண்டாகும். நறுமணம் உடையது. மடல்கள் வெளிர் மஞ்சள் நிறமானவை. பெண் பாளையில், பெண் பூ உண்டாகும் 2 அங். அகலமான தனிமலர்.