பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/755

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

கரும்பு
சக்காரம் ஆபிசினேரம் (Saccharum officinarum, Linn.)

கரும்பு தாவரவியலுள் ஒருவகையான ‘புல்’ எனப்படும். தொல்காப்பியமும் இதனைப் ‘புல்’ எனக் கூறும்.

“புறக்காழனவே புல்லெனமொழிப” -தொல். பொருள். 9 : 86


தொன்று தொட்டுத் தமிழ் நாட்டில் வளர்க்கப்படுவது. அதியமான் முன்னோரால் அவர் நாட்டுக்குக் கொண்டு தரப்பட்டது என்று ஔவையார் கூறுவர். உலகிற்கு இனிய சுவையான சருக்கரை கருப்பஞ்சாற்றிலிருந்து பெறப்படுகின்றது.

சங்க இலக்கியப் பெயர் : கரும்பு
தாவரப் பெயர் : சக்காரம் ஆபிசினேரம்
(Saccharum officinarum, Linn.)

கரும்பு இலக்கியம்

“அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்” -புறநா. 99 : 2
“. . . . . . . . . . . . அந்தரத்து
 அரும் பெறல் அமிழ்தம் அன்ன
 கரும்புஇவண் தந்தோன் பெரும்பிறங் கடையே”
-புறநா. 392 : 19-21


இப்பாடல்களுள் அதியமான் நெடுமான் அஞ்சியின் முன்னோர் கரும்பைக் கொண்டு வந்து தந்ததாக ஔவையார் பாடினார். அவர், ‘அந்தரத்துப் பெறுதற்குரிய, அமிழ்தம் போன்ற கரும்பை இங்குத் தந்தவனுடைய வழித் தோன்றலே’ என்றுதான் பாடியுள்ளார். இப்பாட்டின் பழைய உரைகாரர் அந்தரம் என்பதை அமுதத்திற்கு அடைமொழியாக்காது,