பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/778

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

762

சங்க இலக்கியத்

கிளி கடி மரபினவாகிய குளிர், தட்டை, கவண், தொண்டகச் சிறுபறை முதலியவற்றால் குருவிகளையும், கிளிகளையும் விரட்டுவர். யானை, பன்றி முதலியன தினைப் புனத்தைக் கவர்ந்து அழிக்காமல், அவற்றை விரட்டுவதற்குப் பறை ஒலி எழுப்புவதும் உண்டு. முற்றிய தினையை அறுக்கும் போது மகளிர் பாடுவர்.

“. . . . . . . . . . . . மாமலைப்
 பரீஇ வித்திய ஏனல்
 குரீஇ ஒப்புவாள்”
-குறுந். 72 : 3-5
“சுடுபுன மருங்கில் கலித்த ஏனல்
 படுகிளி கடியும் கொடிச்சி கைக்குளிரே”
-குறுந். 291

“நீடிலை விளை தினைக் கொடுங்கால் நிமிர” -நற். 44 : 6

“தினைத்தா ளன்ன சிறுபசுங் கால
 ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
 குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே”
-குறுந். 25
“ . . . . . . ...... . . . . . . . . . . . . . . அணந்த யானை
 முத்தார் மருப்பின் இறங்கு கைகடுப்ப
 துய்த்தலை வாங்கிய புனிறுதீர் பெருங்குரல்
 நல்கோட் சிறுதினைப் படுபுள் ஒப்பி”
-குறிஞ். 35-38
“இருங்கல் அடுக்கத்து என்னையர் உழுத
 கருங்காற் செந்தினை கடியு முண்டன”
-நற்றிணை. 122 : 1-2

“பொய்பொரு கயமுனி முயங்கு கைகடுப்ப
 கொய்பதம் உற்றன குலவுக்குரல் ஏனல்”
-மலைபடு. 107-108

“நன்பொன் அன்ன புனிறுதீர் ஏனல்
 கட்டளை அன்ன கேழல் மாந்தும்”
-ஐங். 263 : 1-2
“திணைகுறு மகளிர் இசைபடு வள்ளையும்” மலைப. 342

“களிறுஅணந்து எய்தாக் கல்முகை இதணத்து
 சிறுதினைப் படுகிளி எம்மொடு ஒப்பி”
-அகநா. 348 : 9-10

“அடுக்கல் ஏனல் இரும்புனம் மறந்துழி
 யானை வவ்வின தினைஎன நோனாது”
-அகநா. 348 : 10-11