பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 119

போதில் மதுரைக்கு வந்து கவிச்சுவையில் திளைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டனர் என்ற குறிப்பு கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகை"யிற் காணப்படுகின்றது. எனவே தாம் எழுந்த காலத்திலேயே வாழ்வும் வளமும் பெற்றவை சங்க இலக்கியங்கள் எனலாம்.

மேலும் சங்ககாலத்து அரசர்களும் புலவர் பெருமக்களால் பாடல்வழிப் புகழப்படுவதனைப் பெரும் பேறாகக் கருதினர் என்பதனைத் தலையானங்கானத்துச் .ெ ச ரு வெ ன் ற பாண்டியன் நெடுஞ்செழியனின் வஞ்சினக் கூற்றாலறியலாம். மாங்குடி மருதனாரைத் தலைமைப் புலவராகக்கொண்ட புலவர் அவை தன்னைப் பாட வேண்டும் என்ற விருப்பம் இம் மன்னன் வாய்மொழியால் விளக்கமுறுவதனை மதுரைக் காஞ்சி குறிப்பிடுகின்றது.

சங்க இலக்கியம் பாட்டும் தொகையும் என வழங்கும். பாட்டு எனப்படுவது எட்டுத்தொகையாகும். அகமும் புறமும் கொண்டு இவை எழுந்துள்ளன. காதல், வீரம், கொடை முதலிய பண்புகளைப் பாடுவது சங்கப் பாடல்களின் முதன்மை நோக்கமாக அமைந்திருக்கக் காணலாம். இயற்கையின் வருணனை காதல், வீரம், கொடை முதலிய நிகழ்ச்சிகளைப் பாடுவதற்குப் பின்னணியாக அமைந்து இரண்டாம் இடத்தினைக் கவிதையிற் பெறுவதனைக் காணலாம்.

சங்க இலக்கியம் அணிநலஞ் சிறக்கப் பெற்று மிளிர்வத னைக் காணலாம். சங்க இலக்கியத்தினை உவமைக் களஞ்சியம் என்று குறிப்பிட்டுப் பின்வருமாறு டாக்டர் மு. வரதராசனார் கூறுவர் :

‘பிற்காலத்து நூல்களில் வரும் உவமைகள் பலவும் சங்கப் பாட்டுகளுக்குக் கடன்பட்டவை எனலாம். சங்க நூல் களில் வரும் உவமைகள் இயல்பாக அமைந்து காணப்படு கின்றன. அந்தப் பழங்காலப் புலவர்களால் அமைத்துத்