பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 சங்க இலக்கியம்

மரஞ்சாம் மருந்தும் கொள்ளார் மாந்தர்

உரஞ்சாச் செய்யார் உயர் தவம் வளம்கெடப்

பொன்னும் கொள்ளார் மன்னர்

-நற்றிணை 226 : 1-3

விபரீத உவமை

உவமையும் பொருளும் இடம் மாறி அமைவதால் ஒரு புதுமை விளையக் காணலாம்.

பொருளே உவமம் செய்தனர் மொழியினும் மருளறு சிறப்பின் அஃது உவமமாகும்

-தொல் . நூற்பா 284

குவளை போன்ற கண் என்பது இயற்கையான உவமை: கண்போல் குவளை என்பது மாற்றம்: விபரீதம்.

தலைவியின் வடிவத்தை மயிலுக்கும், அவள் கூந்தலில் எழும் மனத்தை முல்லை மலரின் நறுமணத்திற்கும், அவள் தன் மருண்ட விழிகளை மானின் நோக்கிற்கும் தொகுத்து உவமை செய்யப்படுகின்றன.

கின்னே போலும் மஞ்ஞை யால கின் நன்னுதல் நாறு முல்லை மலர கின்னே போலு மாமருண்டு நோக்க கின்னே உள்ளி வந்தனென் நன்னுதல் அரிவை காரினும் விரைந்தே

-ஐங்குறுநூறு, 492: 1 - 5

LDIT6060 o-6)16010

உறவும் தொடர்பும் உள்ள பொருள்கள் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டு ஒரு மாலைபோல் அமையுமேயானால் அது மாலை உவமை எனப்படும். இஃது அந்தாதி உவமையோடு நெருங்கிய தொடர்புடையது,