பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 சங்க இலக்கியம்

இசை அலகோடு - சுருதியோடு இயங்குவது இசைப் பனவாம். அதனோடு தாளமும் சேரின் இசையளவு பாவாகும். இசைப்பாவில் பத்துவகையும், இசையளவு பாவில் ஒன்பது வகையும் உண்டென்பர். பண்ணென்பது இக் காலத்து இராகமே. அது வண்ணம், நிறம், என்று கூறப்பெறும். பண்ணுக்குக் கோவையும், பாலையும் உறுப்புக்களாம். கோவையென்பது சுரம். பாலை என்பது சுரத்தானமாகும். பண்ணும் திறமும் பயில, குழலும் யாழிசையும் சேரத் தாளத்தோடு பாடப்பெறுவது இசைப்பாட்டாம். பிற்காலத் தேவாரப் பாக்கள் இவ்வகையின. வரிப்பாட்டும் இத்தகை யதே. பல்லவி, அநுபல்லவி, சரணம் என்ற அமைதி யுடையது கீர்த்தனை. இது பிற்காலத்தில் நுழைந்தது. இசைப்பாட்டெல்லாம் பண்டு செந்துறை வெண்டுறை, வரி உரு எனவழங்கின. சிந்து, அம்மானை, சாழல், தெள்ளேனம் கும்மி ஆகியவை இசைப்பாட்டு வகையினவே.

சிலப்பதிகாரத்தில் அரங்கேற்று காதை இசைக்களஞ்சிய மாகும். இதில் இசையாசிரியன் இலக்கணம், குழலாசிரியன் இலக்கணம், தண்ணுமை ஆசிரியன் இலக்கணம் ஆகியவை கூறப்பட்டுள்ளன.

யாழும் குழலும் சீரும் மிடறும் தாழ்.குரல் தண்ணுமை, ஆடலொடு இவற்றின் இசைந்த பாடல் இசையுடன் படுத்து வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கித் தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்து தேசிகத் திருவின் ஒசையெல்லாம் ஆசின்று உணர்ந்த அறிவினன் ஆகிக் கவியது குறிப்பும் ஆடல் தொகுதியும் பகுதிப்பாடலும் கொளுத்தும் காலை வசையறு கேள்வி வகுத்தனன் விரிக்கும் அசையா மரபினது இசையோன் தானும்