பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 சங்க இலக்கியம்

கடாமும், பொருநராற்றுப்படையும் யாழின் அமைப்பைச் சித்திரிக்கின்றன.

சிறுபாணாற்றுப்படையில் திவவு, ஆணி, அகளம், பச்சைப் போர்வை, நரம்பு ஆகியவை உறுப்புகளாகக் கூறப் படுகின்றன.

பெரும்பாணாற்றுப்படை போர்வை, வறு வாய், கவைக் கடை, திவவு, மருப்பு, நரம்பு என்பனவற்றை உறுப்புகளாகக் காட்டுகிறது.

மலைபடுகடாம் திவவு, நரம்பு, ஆணி, யாப்பு, பச்சைப் போர்வை உந்தி மருப்பு இவற்றை யாழ் உறுப்புக்களாகக் குறிக்கின்றது.

பறை

ஆடலிலும், போரிலும் இசைவிழாக்களிலும் பறைக்கருவி

சிறந்த இடம் பெற்றிருந்தது. பறை முரசு, முழவு என வழங்கப்பட்டன.

(Աքէքճվ

விழாக்களில் முழவு இமிழ்வதை மதுரைக்காஞ்சி மலைபடுகடாம் போன்ற நூல்களில் குறிக்கப்படுகின்றன.

முழ விமிழு மகலாங்கண் விழவு கின்ற வியன்மறுகு

-மதுரை. 327.328

குரூஉக்கட் பிணையற்கோதை மகளிர் முழவுத் துயிலறியா வியலி ளாங்கண் விழவின் அற்றவன் வியன்கண் வெற்பே

மலைபடு.349-51 சில நேரங்களில் முழவின் ஒசைக்கேற்ப யாழில் இசை எழுப்புவர்.