பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 சங்க இலக்கியம்

சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தில் தென்னாட்டைப் பற்றி வடநாட்டு மக்கள் நன்கறிந்தவர் என்பதற்குரிய சான்றுகள் சில Զ-երI ս

பதஞ்சலியின் காலத்தில் (கி.மு. 150) தென்னாட்டைப் பற்றிய அறிவு மிகவும் வளர்ச்சியுற்று இருந்ததாகத் தெரி கின்றது. தமது மாபாடியத்தில் மகிசுமதி, வைதருப்பம், காஞ்சிபுரம், கேரளம் ஆகிய நாடுகளில் காணப்படும் மொழி இயல் வழக்கைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். தென்னாட்டில் சார சி என்ற பெரிய ஏரிகளைக் குறிப்பிடப் பயன்பட்டதாக வும் குறிப்பிட்டுள்ளார். இதனால் தென்னாட்டு மொழி வழக்காற்றினை அறிந்திருந்தார் என்று தெரிகிறது.

வராகமிகிரர் இந்தியத் துணைக்கண்டத்தை ஒன்பது நாடுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதியிலும் பெறக் கூடிய பொருள்களைப் பற்றிய விளக்கம் தந்துள்ளார். அவற்றுள் காஞ்சி, சேர, சோழ, கொங்கண, பாண்டிய நாடுகள் சிறப்பிடம் பெற்றுள்ளன.

அசோகப் பேரரசனின் சேர கற்சாசனங்களில் இரண்டா வது கற்சாசனமும், பதின்மூன்றாவது கற்சாசனமும் தென் னிந்தியாவோடு இலங்கையையும் சேர்த்துக் குறிக்கின்றன. இவை மட்டுமன்றித் தமிழர்கள் அயல்நாடுகளுடன் கொண்ட கலாசாரத் தொடர்புகளும் தமிழகத்தின் தொன்மையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. காலினும் கலத்தினும் சென்று தமிழர்கள் வாணிகம் செய்திருக்கின்றனர்.

எகிப்தோடு உள்ள வாணிகம் மிகப் பழமையானது என்பதற்குச் சான்று கள் பல உள்ளன. எகிப்து மன்னர்கள் மெல்லிய துணி வகைகளையும் கருங் கட்டைகளையும் வரவழைத்ததாகக் கூறப்படுகின்றது. கி. மு. 15 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் இலவங்கம், சேரநாடாகிய கேரளத்திலிருந்து சென்றதாக இருக்கலாம். கி.மு. 3000த்தில் தென்னாட்டு வணிகரே தம்