பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 சங்க இலக்கியம்

இருப்பதால்தான் அது பளிச்சிடுகிறது என்பது இயற்பியலின் விளக்கம். அத்தகு சிந்தனையின் முன்னோட்டம் கபிலரின் பாடலில் காணலாம்.

பனி பற்றிய சிந்தனை

குன்று குளிர்ப் பன்ன கூதிர்ப் பானாள்

-நெடு. 12 முளரி கரியும் முன்பனிப் பானாள்

-அகம். 163:8 வயங்கு கதிர்கரந்த வாடை வைகறை

-அகநானூறு. 24:8 ஆகிய மேற்கோள்களும் அவை போல்வன பிறவும் பணி யென்பது ஒருங்கிய வெப்பம் (latent heat) கொண்ட நீர்மத்தின் ஒருநிலை என்பதை அறிய முடிகிறது.

வெப்பநிலைப் பாதுகாப்பு

ஒரு பொருளின் வெப்ப நிலை மாறாமல் அதனைப் பாது காத்து வைக்கும் அமைப்புக் கொண்ட கருவியினைச் சேமச் செப்பு என்று பெயரிட்டு அழைத்தனர். அது குறித்த கோட் பாட்டு உருவாக்கம் அக் காலத்தில் முகிழ்க்கவில்லையாயி னும் பயன்பாடு மட்டும் நிலவி வந்தது என உணரலாம். வெப்ப இயக்கம், வெப்பக் கதிர்வீச்சு, வெப்பக் கடத்தல் ஆகியன குறித்து விரிவான சிந்தனை இல்லாவிடினும் முன்னோட்டச் சிந்தனை இல்லை என்று கூறி மறுப்பதற்கில்லை. குறுந் தொகையின் பின்வரும் பாடல் இக் கருத்தினை வலியுறுத்தும்.

ஆசுஇல் தெருவின் ஆசுஇல் வியன்கடை செந்நெல் அமலை வெண்மை வெள்ளிமுது ஒர் இல் பிச்சை ஆர மாந்தி அற்சிர வெய்ய வெப்பத் தண்ணிர் சேமச் செப்பில் பெறி இயரோ நீயோ

-குறுந்தொகை. 277:1.5