பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறாஅ விளையும் அறாஅ யாணர்

– 10: 8

என்று ஒரு தொடரில் சேரநாட்டு வளத்தினை நம் கண் முன்கொணர்வார் பெண்பாற் புலவர் காக்கை பாடினியார் நச்செள்ளையார்.

மழை உரிய காலத்தில் தப்பாது பொழிகிறது. ஆண்மானும் பெண்மானும் காட்டகத்தே கூடித் துள்ளித் திரிந்து விளையாடுகின்றன. பறவைகளும் வண்டினமும் மரக் கிளைகளிலிருந்து ஆரவாரிக்கின்றன. பழங்களும் கிழங்குகளும் பலரும் பலவாறு உண்ணவும் குறைவுபடா துள்ளன. பசு நிரைகள் பசியாரப் புல்மேய்ந்து களித்துலவு கின்றன. வறுமையறியாத வளங்கெழு சிறப்பினால் சேர நாட்டில் பலவாகிய புதுப்புதுக் கூல வகைகள்-தானிய வகைகள் பல்கிக் கிடக்கின்றன என்னும் அரிய செய்தியினை உரிய முறையில்,

வானம் பொழுதொடு சுரப்பக் கானம் தோடுறு மடமான் ஏறுபுணர்ந்து இயலப் புள்ளு மிஞறு மாச்சினை ஆர்ப்பப் பழனும் கிழங்கும் மிசையற அறியாது பல்லான் நன்னிரை புல்லருந் துகளப் பயங்கடை அறியா வளங்கெழு சிறப்பிற் பெரும்பல் யாணர்க் கூலங் கெழும

—1: 7

என்று பெருங்குன்றுார்க் கி ழ ா ர் பெருமிதத்துடன் குறிப்பிடுவார்.

புறநானூற்றின் இரண்டாம் பாடலில் ஓர் அரிய செய்தி பொதிந்துள்ளது.

அலங்குளைப் புரவி ஐவரொடு சினை இ நிலந்தலைக் கொண்ட பொலம்பூத் தும்பை