பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 69’.

ஈரைம் பதின்மரும் பொருதுகளத்து ஒழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய். -புறம். 2: 18 - 16:

இப் பகுதிக்குப் புறநானூற்றின் பழைய உரைகாரர், “அசைந்த தலையாட்டமணிந்த குதிரைகளையுடைய பாண்டவர் ஐவருடனே சினந்து நிலத்தைத் தம்மிடத்தே கொண்ட பொற்பூந் தும்பையுடைய துரியோதனன் முதலாகிய ஒற்றுவரும் பொருத போர்க்களத்தின் கட்படுந் துணையும் பெருஞ்சோறாகிய மிக்க உணவை இருபடைக்கும் வரையாது வழங்கினோய்’ என்று குறிப்பிட்டுள்ளார். இப் பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் முதற்பத்தின் பாட்டுடைத் தலைவனாயிருக்க வேண்டும் என்றும், இவன் பாரத காலத்தவன் என்றும், . குருச்சேத்திரத்தில் பொருத பாண்டவர், கெளரவர் ஆகிய. இரு படைவீரர்களுக்கும் பெருஞ்சோறு வழங்கிய கொடை யுள்ளத்தினன் என்றும், இவனைப் பாடிய முரஞ்சியூர் முடி. நாகராயரும் பாரத காலத்தவராயிருக்க வேண்டும் என்றும் , ஆய்வாளர் குறிப்பிடுவர்.

துறக்கம்எய்திய தொய்யா நல்லிசை

முதியர்ப் பேணிய உதியஞ் சேரல்

பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை

-அகம். 233: 7 - 9

என்று அகநானூற்றுப் பாடலொன்றும் இந் நிகழ்ச்சியைக் குறிப்பிடுகின்றது.

சேரநாட்டு மக்களின் வாழ்க்கை செம்மாப்புடையதாகத் திகழ்ந்தது. பிறர் பொருள் விரும்பாத பெற்றியராகச் சேரநாட்டு மக்கள் விளங்கினர்: அ றி வு த் தி ற ம் மிகுந்திருந்தனர். .ெ ச ம் ைம .ெ ந றி திறம்பாதவராய்த் துலங்கினர். அன்பு நெறிபற்றி வாழ்ந்தனர். நோயற்ற யாக்கை உடையோராய்ப் பொலிந்தனர். இதன் காரண.