பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 91

கின்றன. நாட்டு வளத்தினை 94 முதல் 144 வரை உள்ள அடிகள் காட்டுகின்றன. கூத்தர் பெறும் சிறப்பு. காவலர் சிறுகுடி, பாக்கத்தில் உள்ளோர் விருந்தோம்பும் சிறப்பு. இவற்றை 144 முதல் 185 வரை உள்ள அடிகள் உணர்த்து கின்றன. அவன் மலைநாட்டின் சிறப்பும் அம் மலையில் ாழும் ஒசைகளும் 185 முதல் 348 வரை உள்ள அடிகளில் சிறப்பித்து உரைக்கப்படுகின்றன. கூத்தர் செல்லும் வழியின் இயல்பினை 349 முதல் 448 உள்ள அடிகளில் விளக்கு கின்றார். மருதநில வளம், சேயாற்றின் சிறப்பு, நன்னன் மாட்டின் மூதூர்ச்சிறப்பு, நன்னன் வேண்மானின் கோபுர வாயில் சிறப்பு இவை 449 முதல் 491 வரை உள்ள அடிகளில் விவரிக்கப்படுகின்றன. கோபுரவாயிலில் உள்ளார் உபசரிக்கும் முறையினை 492 முதல் 497 வரை உள்ள அடிகள் உணர்த்து கின்றன. கோபுரவாயிலில் காணப்படும் கையுறைப் பொருள் களை 498 முதல் 526 வரை உள்ள அடிகள் குறித்து நிற்கின்றன. கூத்தன் நன்னன்பாற் செல்லும் முறை. நன்னன் வேண்மானைப் புகழும் முறை, நன்னன் வேண்மானின் இயல்புகள், அவன் பரிசிற் சிறப்பு இவற்றை 627 முதல் 583 வரை உள்ள அடிகள் தெளிவாக்குகின்றன.

இதில் குறிஞ்சி நிலப்பகுதியில் முல்லை, பாலை, மருத நிலங்கள் இருப்பதாகப் பாடியுள்ளார். மலையில் புல்வெளி யுள்ள பகுதி முல்லை, கற்களும், பாறைகளும் நிறைந்த பகுதி பாலை, தினை விளையும் பகுதி குறிஞ்சி, கரும்புநெல் பயிராகும் ஆற்றுப்பகுதி மருதம் என மலை மீதுள்ள விளைவு களைக் கொண்டு நானிலங்களாகப் பகுத்துக் கூறியுள்ளார்.

கான்கு ஆற்றுப்படைகளிலும் பொதுச் செய்திகள்

1. நான்கு ஆற்றுப்படைகளிலும் பொருநன், பாணன்.

கூத்தன் இவர்களுடன் சென்றோர் வறுமைநிலை அறியப்

படுகிறது.

2. இவர்கள் கைக்கொண்ட இசைக்கருவிகள் பற்றிய

குறிப்புகளைத் தெளிய முடிகிறது.