பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 93

மாணிக்கனார் அவர்கள் கருத்து. இது 817 அடிகளை ப_டையது.

மலைநாட்டுக் குரியவன் முருகன் என்பதை உணர்த்த வளம் மிகுந்த மலை ஒன்று சிறப்பிக்கப்படுகின்றது. முருகன் விரும்பிக் குடிகொண்ட ஆறுபடை வீடுகள் பேசப் படுகின்றன. முதற்பகுதியில் முருகன் திருவுருவச் சிறப்பு, அவன் மாலை விசேடங்கள், சூரர மகளிர் செயல்கள். முருகன் சூரரை வென்றமை, மதுரைச் சிறப்பு, திருப்பரங் குன்றம் இயற்கை வளம் (1 - 77) இவை குறிக்கப் படுகின்றன. இரண்டாம் பகுதியில் யானை இயல்பு. ஆறுமுகம் செயல்கள், திருச்சீர் அலைவாயில் அவன் இருத்தல் (78 - 125) முதலியன பேசப்படுகின்றன. மூன்றாம் பகுதியில் முனிவர் ஒழுக்கம், தேவமகளிர் இயல்புகள், திருமால் முதலியவர்கள் பற்றிய செய்திகள் இடம் பெறுகின்றன. நான்காம் பகுதியில் அந்தணர் இயல்பு, அவர்கள் திருவேரகத்தில் முருகனை வழிபடும் முறை ( 177 - 189) இவை சித்திரிக்கப்படுகின்றன. ஐந்தாம் பகுதி யில் குன்றக் குரவை, வழிபடும் மகளிர், ஆடுமகளிர், பாடுமகளிர் இயல்புகள், இவற்றைக் (190 - 217) காணலாம். ஆறாம் பகுதியில் முருகன் எழுந்தருளிய இடங்கள், அவனைத் துதிக்கும் முறை, அப் பெருமானிடம் சென்று அருள் பெறும்வழி, தொண்டர்தம் இயல்புகள், முருகன் அருள்புரியும் முறை, பழமுதிர் சோலைவளம் ஆகியன கூறப் பட்டுள்ளன. இந்த முறை வைப்பு பொருநராற்றுப்படை முதலிய ஆற்றுப்படைகளில் காணப்படவில்லை.

மற்ற ஆற்றுப்படைகள் எல்லாம் ஆற்றுப்படுத்தப் பட்டவரது பெயரால் அ ைம ந் த ன வ கு ம். திருமுருகாற்றுப்படை அவ்வாறு அமையாமல் பாட்டுடைத் தலைவன் பெயரால் அமைந்துள்ளது. புலவராற்றுப்படை பற்றி “புலவராற்றுப்படை புத்தேட்கும் உரித்தே எனக் குறிக்கின்றது பன்னிருபாட்டியல்,