பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113

சில பார்வைகள்

கண்டு கூறல் அரிதாக இலங்குவது போல உயிர் வழங்கு பெருநெறியும் காட்டலாகாப் பொருளாக இரங்குகின்றதாம்.

தண்பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம் உண்டென உணர்தல் அல்ல தியாவதும் கண்டினிது விளங்காக் காட்சி போன்றது உயிர் வழங்கு பெருநெறி ஒரு திறம்பட்டது

-மணிமேகலை; 12: 63 - 65.

ஆபுத்திரனின் தோற்றம் கதிரவனின் காலைத் தோற்றத்திற்கு “D - Sli 577) II) கூறப்பட்டிருப்பதனையும் காணலாம்.

குணதிசை தோன்றிக் காரிருள் நீத்துக் குடதிசை சென்ற ஞாயிறு போல மணிபல் லவத்திடை மண்ணுட ம்பிட்டுத் தனியா மன்னுயிர் தாங்குங் கருத்தொடு சாவக மாளும் தலைத் தான் வேந்தன்

ஆவயிற் றுதித்தனன் ஆங்கவன் தானென்

-மணி: 14: 99 . 104.

திருநாவுக்கரசர் பெருமானின் பிறப்பினைச் சுட்டவந்த சேக்கிழார் பெருமான், கலை தழைக்கவும் தவநெறியாளர் சிறக்க வாழவும், உலகவிருள் போக்கும் கதிர்போல மருணிக்கியார் பிறந்தார் என்று குறிப்பிட்டிருக்கக் காணலாம்.

அலகில் கலைத்துறை தழைப்ப

அருந்தவத்தோர் நெறி வாழ உலகில் வரும் இருள் நீக்கி

ஒளிவிளக்கு கதிர் போல மலரு மருணிக்கியார்

வந்தவ தாரஞ்செய்தார்

-பெரிய: திருநாவுக்கரசர் 18.