பக்கம்:சங்க கால மகளிர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105

 பொழுது தலைவன் 'என்னைக் காதல் நோயால் துன்புறுத்தியவள் இன்னாள் என்பதை யாவரும் அறிந்து கூறும்படி யான் மடல்மாவூர்ந்து மறுகிற் (தெருவிற்) செல்வேன்' என்று குறிப்பிடுகின்றான்.

தலைவன் தன்னுடைய உருவத்தையும், தலைவியினது உருவத்தையும் எழுதியமைத்த படத்தைக் கையிலேந்தி மடன்மாவிலேறி மறுகிற் செல்வானாதலின், அந்நிலையில் இன்னாள் கணவன் இவன் என்று ஊரினர் அறிந்து கொள்வர் என்பதாம்.

நல்லோள் கணவன் இவன்எனப்

பல்லோர் கூறயாம் நாணுகஞ் சிறிதே.'"

இங்கும் இன்ன நல்ல பெண்ணின் கணவன் எனக் காண்போரால் தான் உரைக்கப்படுதலைத் தலைவன் பெரிதும் விரும்பினான் என்பது போதரும்.

இந்தப் பழக்கத்தின் - மகளிரின் தனிச்சிறப்பின் காரணமாகவோ என்னவோ திருமுருகாற்றுப்படையில் முருகப் பெருமானைக் குறிப்பிட வரும் நக்கீரர், 'குற்றமற்ற கற்புடைய தெய்வயானையின் கணவன் இவன்,' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனையே மறவாது திருஞானசம்பந்தர் திருமறைக்காடு தேவாரத்தில் சிவபெருமானைக் குறிக்க வருகின்ற பொழுது , வள்ளியின் கணவனாகிய முருகனுக்குத் தந்தை இவர் என்று குறிப்பிட்டிருப்பதனைக் காணலாம்.??


3 10. குறுந்தொகை: 14: 5-6. 311. திருமுருகாற்றுப்படை: 5.

"மறுவில் கற்பின் வாணுதல் கணவன்' 312. திருஞானசம்பந்தர் தேவாரம்: திருமறைr

காட்டுப்பதிகம்

'நம் செந்தில் மேய,

வள்ளி மணாளர்க்குத் தாதை கண்டாய்'