பக்கம்:சங்க கால மகளிர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10


பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றல் பெண்டிரின் தனித் திறமையாகும்:

மகளிர் அழகு

நீர் போன்ற சாயலும், (நீரோ ரன்ன சாயல்)[1], மயில் போன்ற இயலும் (மயிலியற் சாயல்)[2], நறுமை, தன்மை, மென்மையாகிய இயல்புவாய்ந்த மேனியும்[3], இயற்கை மணமும்[4], மாமைக் கவினும்[5] உடையவர்களாக மகளிர் விளங்கினர்.

பூப்போன்ற கண்களும், மூங்கில் போன்ற திரண்ட தோள்களும், பிறைபோன்று மதியை மயக்கும் நெற்றியும் உடையவராய் மகளிர் திகழ்கின்றனர்[6].

"மூங்கில் போலத் திரண்ட தோள்கள்; ஐந்து வகையாகப் பிரித்துப் பின்னிய நறுமணங் கமழும் கூந்தல்; மானையும் வெல்லும் மருட்சி நிறைந்த பார்வை; மயிலின் சாயல் எல்லாம் உடையவளே! சிலம்பின் உள்ளிடு பரல்கள் ஒலி முழங்க, அணிந்துள்ள அணிகள் ஒளிவிட, கொடியென, மின்னலென, அணங்கென நீ தளர்ந்தசைந்து வருவாய்! தெரிந்து கொள்ளவே முடியாத நுண்மையான நின் இடையினிடத்தே என் கண்கள் களவாகப் பார்த்தன. செல்வம் நிறைந்த உயர்ந்தோங்கு சிறப்புடைய நின் தந்தையின்

——————————————

  1. குறுந்தொகை: 95: 4
  2. " 2: 3
  3. " 168:4
  4. " 2:4—5.
  5. " 9 & 199
  6. பூவொடு புரையுங் கண்ணும் வேயென
    விறல்வனப் பெய்திய தோளும் பிறையென
    மதிமயக்கறூஉ நுதலும்-குறுந்தொகை:226:1—3