பக்கம்:சங்க கால மகளிர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

மகளிர் கூத்துப் பயிற்சி

உள்ளக்கருத்துகளை உடலின் உறுப்புகளில் தோன்றும் மெய்ப்பாடுகளால் புலப்படுத்தும் நாடகத்தில் நல்ல புலமை பெற்றிருந்தனர் என்பதும் அறியப்படும். மகளிர் ஆடும் துணங்கைக் கூத்தைப் பற்றிய செய்தி முன்னரே கூறப்பட்டது. விறல்பட ஆடும் பெண் ‘விறலி’ என வழங்கப் பெற்றாள். யாழ் முதலாகிய கருவி இசைக்கு இயையக் கூத்தாடும் விறலியர் திறம் மலைபடுகடாத்துள் விளக்கமாகப் பேசப்பட்டுள்ளது.

இதுகாறும் திருமணத்திற்கு முன்னர்ப் பெண் ஒருத்தியின் வாழ்வு எவ்வாறெல்லாம் அமைந்திருந்தது என்பதனைக் கண்டோம்.

இனி, திருமணத்திற்குப் பின்னர் மகளிர் வாழ்வு எவ்வாறெல்லாம் துலங்கியது என்பதனைக் காண்போம்.

திருமணத்திற்குப் பின்னர் வாழ்க்கை நிலை

சின்னஞ் சிறு வயதில் சிறுசிறு சண்டைகள் இட்டுப் பகைத்து நின்ற தலைவனும் தலைவியும் காதலில் தலைப்பட்டு நெஞ்சம் நெகிழ்ந்து நிற்கின்றனர். ”தலைவன், தலைவியின் கூந்தலைப் பிடித்து இழுக்கவும், தலைவி தலைவனது புல்லிய தலைமயிரை வளைத்து இழுப்பாளாய் ஒடவும்: அன்புடைய செவிலித்தாயர் இடைமறித்துத் தடுக்கவும், ஒழியாமல், அயன்மையையுடைய சிறிய சண்டையை முன்பு பொருந்தியிருந்தனர். இப்பொழுது மலரைப் பிணைத்த இரட்டை மாலையைப் போன்ற இவர்கள், மணம் புரிந்து மகிழும் இயல்பை யுண்டாக்கினாய், ஊழ்வினையே! நீ நிச்சயமாக நன்மைக் கூறுபாட்டினையுடையாய்” என்று இடைச்சுத்துக் கண்டோர் (the on-lookers of the palaitract) தம்முள்ளே சொல்லியதாக மோதாசனார் என்னும் புலவர் பாடியுள்ளார்.