பக்கம்:சங்க கால மகளிர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23


இவனிவ ளைம்பால் பற்றவு மிவளிவன்
புன்றலை யோரி வாங்குநள் பரியவும்
காதற் செவிலியர் தவிர்ப்பவுந் தவிராது
ஏதில் சிறுசெரு வுறுப மன்னோ
நல்லைமன் றம்ம பாலே மெல்லியற்
றுணைமலர் பிணைய லன்னவிவர்

மணமகி ழியற்கை காட்டி யோயே.[1]

எங்கேயோ பிறக்கும் தலைவனும் தலைவியும் எதிர்பாராது சந்தித்து ஒருவரோடு ஒருவர் உள்ளத்தாற் பிணிக்கப்படுகின்றனர். இவ்விருவர் தாயரோ தந்தையரோ ஏற்கெனவே உறவுடையவர்கள் அல்லர்; முன்னர் ஒருவரை அறியாத தலைவன் தலைவியர் இருவரும் இப்போது செம்மையான நிலத்தில் விழுந்து கலந்த மழைத்துளிபோலப் பிரிக்க முடியாத வராய் விட்டனர். இவ்வாறு குறுந்தொகைப் பாடலொன்றில் செம்புலப்பெயல்நீரார் என்னும் புலவர் குறிப்பிடுகின்றார்.

யாயும் ஞாயும் யாரா கியரோ
எங்தையும் நுங்தையும் எம்முறைக் கேளிர்
யானு நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனிர் போல

அன்புடை நெஞ்சங் தாங்கலங் தனவே.[2]

பெரும்பாலும் களவு மணமே அந்நாளின் நடைமுறையாக (order of the day) இருந்தது. தம்மாற் காதலிக்கப் பெற்ற தலைவனையே மணந்து கொள்ளவேண்டும் என்ற விருப்பத்தால் மகளிர் இறைவனை மலர் தூவி வழிபட்டனர்.

“மலைவாணர் பெற்ற மங்கையொருத்தி, தன்னால் விரும்பப்பட்ட தலைவனுக்குந் தனக்கும் விரைவில் மணம் நிகழ வேண்டும் என்ற கொள்கையால், தம் குலமுதற்கடவு


  1. குறுந்தொகை: 229.
  2. குறுந்தொகை: 40.