பக்கம்:சங்க கால மகளிர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

காலத்தே மகளிரை மணத்தில் பெற, மகளிர் அணிகலன்களுக்கெனப் பெரும் பொருளினைப் பரிசாகக் கொண்டுவந்து தந்தார்கள் என்பதனை யறிகிறோம். ஆனால், அதற்காகத் தகுதியில்லாத ஒருவன் பெரும் பரிசுப் பொருள்களைக் கொணர்ந்து தந்தாலும் தம் மகளைப் பழந்தமிழ்ப் பெற்றோர் மணம் செய்து கொடுத்தார்களில்லை என்ற நற் செய்தியினை நாம் அறிய வேண்டும்.

முழங்குகடன் முழவின் முசிறி யன்ன
நலஞ்சால் விழுப்பொருள் பணிந்துவந்து கொடுப்பினும்
புரையர் அல்லோர் வரையலள் இவளெனத்

தந்தையும் கொடாஅன்.[1]

காதலன் ஒருவனைத் தலைவி தன் தலைவனாகத் தேர்ந்தெடுத்துவிட்ட நிலையிலேயே அவளைத் தன் கணவனாகக் கொண்டு விடுகின்றாள். உள்ளம் பறிகொடுத்த நிலையில் உள்ளங் கவர்ந்த கள்வனையே தன் கணவனாக வரித்து விடுகிறாள் குறிஞ்சிப் பெண் ஒருத்தி. அருவியில் குதித்து விளையாடிய அவள் கையும் காலும் சோர்ந்து தோழிகளாலும் காப்பாற்ற முடியாமல் அருவியோடு அடித்துச் செல்லும் பொழுது அவ்வழியே வந்த தலைமகன் ஒருவன் அவளைக் காப்பாற்றிக் கரை சேர்த்தான். அவள் உடலைத் தழுவிக் காப்பாற்றிய அவனையே வரித்துவிட்ட நிலையில்,

அருமழை தரல் வேண்டின் தருகிற்கும்

பெருமையள்.[2]

ஆகிவிட்டாள். இவ்விடத்தில், “தெய்வத்தைத் தொழுதலின்றித் தன் கணவனையே தொழுதெழும் பெண் ஒருத்தி, பெய்ய வேண்டிய காலத்தில் பெய்த மழைக்குச்


  1. புறநானூறு: 383:10-13 .
  2. குறிஞ்சிக்கலி: 3: 6