பக்கம்:சங்க கால மகளிர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

51

இவ்வாறு தனக்கு வாய்ந்த மனைவி நற்குண நற்செய் கைகளில் மேம்பட்டு விளங்கும் காரணத்தால்தான் தலைவன், வயது முதிர்ந்துங்கூடத் தான் கவலையின்மை யால் ஆண்டு பலவாகியும் நரையின்றி நலமுடன் வாழ் வதாகக் குறிப்பிடுகின்றான்:

யாண்டுபல வாக நரையில வாகுதல்

யாங்கா கியரென வினவுதி ராயின் மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர்.126

இத்தகைய காதற் கணவன் இறந்துபடுவானேயானால் மனைவி இயல்பிலேயே உயிர்வாழ ஒருப்படாள். 'இந்தப் பிறவியில் பிரியமாட்டேன்' ' என்று திருவள்ளு வரின் காதலன் கூறிய அளவிலேயே திருவள்ளுவர் காட்டும் காதலி, இனிவரும் பிறவிகளில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணிர் கொண்டாள் என்று அறிகிறோம்:

இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்றேனாக் கண்ணிறை நீர்கொண் டனள்.'127

எனவே அரும்பெறற் கணவனை இழந்த மகளிர், தாம் பின்னர் வாழ விரும்பாதவராய்த் தம்முயிரையும் மாய்த்துக் கொண்டனர். ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் என்னும் சங்க கால அரசன் இறந்ததும், அவன்தன் ஆருயிர் மனைவி பெருங்கோப்பெண்டு அவனோடு ஒருங்கே மாளவேண்டும் என்று விரும்பி அவனை எரியூட்டிய ஈமத்தீயிற்புக முனைந்தாள். அதுபோது சான்றோர் பலர் அவள்செயலைத் தடுத்தனர். அதுபொழுது அச்சான்றோர்களைப் பார்த்துப் பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு பின்வருமாறு கூறினாள்.

_

126. புறநானூறு: 191:1-3, 127. திருக்குறள்: 1315