பக்கம்:சங்க கால மகளிர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

{{rh| |5|}



சங்ககால மகளிர்

தமிழ் நாட்டிற்கே சிறப்பினை நல்கும் பழந்தமிழ் இலக்கியங்களின் உயிர்ப் பொருளாக இலங்கும் மகளிர்பற்றி இந்நூல் அமைகின்றது.

எல்லாம் வல்ல இறைவனை - பிறவா யாக்கைப் பெரி யோனை - உமையொரு பாகனாகக் கண்ட நாடு தமிழ்நாடு. 'பெண்ணின்றேல் ஆணில்லை என்று வாழ்வியற் கொள்கை எழுந்த நாடு இது.

மங்கைய ராகப் பிறப்பதற்கே - நல்ல
 மாதவஞ் செய்திட வேண்டும் அம்மா! 
பங்கயக் கைநலம் பார்த்தலவோ - இந்தப்
 பாரில் அறங்கள் வளரும் அம்மா!
என்று இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர் கவிமணி அவர்கள் பாடினார். -
உவந்தொருவன் வாழ்க்கை சரியாய் நடத்த
உதவுபவள் பெரும்பாலும் மனைவி ஆவாள்
அவளாலே மணவாளன் ஒழுங்கு பெற்றான்
அவளாலே மணவாளன் சுத்தி பெற்றான்.
 என்று கூறுவர் பாரதிதாசன் அவர்கள்.

1. கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை;

மலரும் மாலையும்,

பெண்ணின் உரிமைகள் : பக். 148

2. பாரதிதாசன் பாரதிதாசன் கவிதைகள்; முதல் தொகுதி, பெண்களைப்பற்றிப் பெர்னர்ட்ஷா.