பக்கம்:சங்க கால மகளிர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

பெருமையும் உரனும் ஆண்களுக்குரிய இயல்புகள் என்றார். [1]

பெருமை என்பதற்கு அறிவும் ஆற்றலும் புகழும் கொடையும் ஆராய்தலும் பண்பும் நண்பும் பழி பாவம் அஞ்சுதலும் முதலியனவாய் மேற்படும் பெருமைப் பகுதி என்றும், உரன் என்பது நிலையான தன்மை மாறுபடாது கலங்காது துணிதலும் முதலிய வலியின் பகுதிகள் என்றும் நச்சினார்க்கினியர் உரை கண்டுள்ளார். [2]

தொல்காப்பியனார் அடுத்த நூற்பாவில் (Sutra), அச்சம், நாணம், மடனும் பெண்பாற்குரிய பண்புகள் என்று குறிப்பிட்டார். அச்சம் என்பதற்கு, அன்பு காரணமாகத் தோன்றிய அச்சம் என்றும், நாணம் என்பதற்கு, காமக்குறிப்பு நிகழ்ந்தபோது ஏற்படும் உள்ளவொடுக்கம் என்றும், மடன் என்பதற்கு, செவிலியர் முதலில் கூறியது கொண்டது. அக்கொண்டதை விடாமை என்றும் உரையாசிரியர் நச்சினார்க்கினியர் உரைப்பர். [3]

அடுத்து உயிரைக் காட்டிலும் நாணம் சிறந்தது; அந் நாணத்தைக் காட்டிலும் கற்பு சிறந்தது என்றும்,[4]அடக்கமும், மறை புலப்படாமல் நிறுத்தும் உள்ளமும், மனம் வளைதலின்மையும், களவின்கண் செய்யத் தகுவன கூறலும், நன்மை பயப்பனவும் தீமை பயப்பனவும்


  1. ‘பெருமையும் உரனும் ஆடுஉ மேன’– தொல், களவியல்: 7
  2. தொல்: களவியல்: 7 நூற்பா உரை.
  3. தொல்: களவியல்: 8 நூற்பா உரை.
  4. உயிரினுஞ் சிறந்ததன்று நானே நாணினுஞ்
    செயிர்தீர் காட்சிக் கற்புச்சிறந் தன்று -தொல்: களவியல்: 22

ச.ம.-5