பக்கம்:சங்க கால மகளிர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93


எண்ண வேண்டியுள்ளது. மாறாக, பேகன் என்னும் வள்ளல் ஒருவன், தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து தவறான வாழ்க்கையினை மேற்கொண்டொழுகியமை அக்காலச் சான்றோர்களான கபிலர்,[1] பரணர்[2] அரசில் கிழார்,[3] பெருங் குன்றூர் கிழார்[4] முதலியவர்களால் கடியப்பட்டுள்ளது.

கிழவன் பணிவும் கிழவி உயர்வும்

கற்புக் காலத்தில் தலைவிக்குரியதோர் மரபினைக் கூறும் தொல்காப்பியனார் தலைமகள் உயர்வும், தலைமகன் தாழ்வும் ஆராயுங்காலத்துப் புலவிக் (ஊடல்) காலத்து உரியன என்று குறிப்பிட்டுள்ளார்:

மனைவி உயர்வுங் கிழவோன் பணிவும் நினையுங் காலைப் புலவியுள் உரிய?[5]

தலைவனோடு ஊடுகின்றாள் தலைவி. அவளைச் சமாதானப்படுத்த முயல்கின்றான் தலைவன். தலைவி கூறுகின்றாள்; வேலை கெட்டு என்னிடம் பொய் பேசிக் கொண்டிருக்க வேண்டா: 'நின்மாயப் பேச்சுக்கு மயங்குபவர் எவரேனும் இருப்பாரானால், அவரிடம் போய்ச் சொல்லிக்கொள்' என்கிறாள். தலைவன் கூறுகிறான்; 'பெண்ணே: உன் அருள் பார்வை என்மேல் பட்டாலன்றி, யான் உயிர் வாழேன்' என்கிறான்.[6]


  1. புறநானூறு ; 143
  2. "; 144,145
  3. "; 146
  4. "; 147
  5. தொல்; பொருளியல் ; 31.
  6. மருதக்கலி; 23.