பக்கம்:சங்க கால மகளிர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96


பெண்கொலை புரிந்த நன்னன்

பெண்கொலை செய்தல் பெரும்பாவம் எனக் கருதப்பட்டது. பின்வரும் செய்தியால் அறியப்பெறும்.

நீராடும் பொருட்டுச் சென்ற பெண் ஒருத்தி, அந்த அருவி நீர் கொணர்ந்த பசிய மாங்காயைத் தின்றதாகிய குற்றத்திற்காக, எண்பத்தொரு ஆண் யானைகளோடு அவளது எடைக்கு எடை பொன்னாற் செய்த பாவையைக் கொடுப்பவும் ஏற்றுக் கொள்ளாதவனாய், அப்பெண்ணைக் கொலை செய்துவிட்டான் நன்னன். எனவே நன்னன் நீங்க முடியாத நரகத்தின்கண் சென்று துன்புற்றான் என, வரலாற்றுச் செய்திகளைத் தம் பாடல்களுள் அமைப்பதில் வல்ல பரணர் பாடியுள்ளார். [1]

புறநானூற்றுப் பழைய உரைகாரரும் (old commentator) "நன்னன் பெண்கொலை செய்த குற்றத்தால் அவனது குலத்தில் பிறந்தார், சான்றோரால் வரையப்படுதற்குக் (நீக்கப்பட்டதற்கு) காரணமாவர்" என்று எழுதியுள்ளமையும் ஈண்டுக் கருதத்தக்கதாம்.[2]

கோசர் என்னும் வாய்மைக்குப் பேர்போன அறிவுக் கூட்டத்தார் சங்க காலத்தே தமிழகத்தே வாழ்ந்த சான்றோர் ஆவர். நன்னன் பெண்கொலை புரிந்த அடாத செயல் அற நாட்டங் கொண்ட அவர்களுக்கு ஆறாச்சினமும் துன்பமும் தந்திருக்க வேண்டும்.

ஏனெனில் பரணர் பாடிய பிறிதொரு குறுந்தொகைப் பாடலில், "நன்னனது காவல் மரமாகிய (totem tree) நறுமணங் கமழும் மாமரத்தை வெட்டி, அவனது நாட்டி-


  1. குறுந்தொகை; 293;1-6.
  2. புறநானூறு: 151 உரை.