பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

சிகரம் உயர்ந்த நெடிய மலையில் ஏறுதற்கரிய பிளவுபட்ட சிறியவழி. இத்துணைத் துன்பந்தரும் வழியில் நின்னைக் காண இங்கு வந்தோம். உன்னை நினைத்து இங்கு வரச்செய்தது இரவலர்க்கும் பரிசில் மாக்களுக்கும் நீ ஈந்து அடைந்த புகழே ஆகும்.”

“நீ உன் மன்றத்தில் அமர்ந்திருக்கையில் உன் கண்முன்னே பரிசிலர்களைக் காணின், கன்றும் பிடியும் கலந்து கொடுக்கும் கடப்பாடுடையவன் என்பது யான் அறிந்ததே. என்றாலும், யான் இது போது இங்கு உன்னை நாடி வந்துற்றது, உன்னிடம் மாதங்கம் பெற்று மகிழ்ந்து போதற்கன்று. குதிரைகளைப் பெற்றுக் குதூகலத்துடன் செல்ல அன்று. ஆனால், யான் வந்தது நின்னைக் கண்டு, நின்னை வாழ்த்திச் செல்லவே யாகும். வாழ்க நின் கொற்றம் ஓங்குக நின் வாழ்நாள்!” என்று வாழ்த்தினரே அன்றி, எதையும் வாங்க வந்திலர். என்றாலும், அண்டிரன் அவரை யாதொன்றும் ஈயாது வாளா அனுப்பி இருப்பனோ? பொன்னும் மணியும் சிறக்கவே ஈந்திருப்பன். கற்பகத்தைக் கண்டவர் வறிதே மீள்வரோ? மீளார்.

அண்டிரனும் ஓடைகிழாரும்

ஆய் அண்டிரன் ஈகையைப் புகழ்ந்து துறையூர் ஓடைகிழார் என்பாரும் பாடியுள்ளார். இவரே அன்றிக் குட்டுவன் கீரனார் என்பாரும் பாடியுள்ளார். துறையூர் ஓடைகிழார் தம்மை மிகவும் வறுமை நோய் பன்னாள் வருத்த, அதனால் சொல்லொணாத் துன்பத்தினை நுகர்ந்தவர். அவர் தாங்கொணா வறுமை வந்தால் ஓங்கிய அறிவு குன்றும் என்பதற்கு இணங்க வறுமையால் பன்னான்

சி. ச.-3