பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

மாரி இடையறாது பொழிந்தால் அன்றோ தானம் தவம் இரண்டும் நிலவுலகில் தங்கும் வானம் வழங்காது எனில் இவ்விரண்டும் தங்காவே. ஆகவே இவன் மழை வளம் தரும் தோட்டி மலையில் மாண்புடன் வாழ்ந்து வந்தனன். இதனைச் சிறுபாணாற்றுப் படை ஆசிரியர் வெகு அழகுபட,

"கரவாது நாட்டோர் உவப்பநடைப் பரிகாரம்
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத்
துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு
நளிமலை நாடன் நள்ளி ”

என்று பாடிக் களித்துள்ளனர்.

வன்பரணர்க்கும் நள்ளிக்கும் இருந்த நட்புடைமை

இனி வன்பரணருக்கும் நள்ளிக்கும் இருந்த தொடர்பையும் அன்பையும் சிறிது கவனிப்போமாக. பரணர் என்னும் பெயருடையார் வேறு இரு பெரும் புலவர்கள் இருந்துள்ளனர். கபிலருக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர் பரணர் என்பவர். இதனால், 'கபில பரணர்' என்னும் தொடரும் நீண்ட நாளாக வழக்கத்தில் வழங்கப்பட்டு வருகின்றது. இதனை இச்சந்தர்ப்பத்தில் நீங்கள் அறிதல் சாலவும் நன்றெனவே இங்கு யான் குறிப்பிட்டனன். இவ்விரு பரணர்களினும் இவர் வேறுபட்டவர் என்பதை வன்பரணர் என இவருக்கு முன்னுள்ள அடைமொழியால் நன்கு உணரலாம். வன்பரணர் கண்டீரக் கோப்பெருநற் கிள்ளியின்பால் பெற்ற பரிசில் பல என்பது இவருடைய பாட்டால்