பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

நெஞ்சிறுகப்புல்லி இன்புற்றார். இளவிச்சிக்கோ என்பானைத் தழுவாது வாளா இருந்தனர். ஒரு பெரும் புலவர் ஓர வஞ்சனையால் இவ்வாறு செய்தால், எவர்தாம் பொறுப்பர்? அறிஞர் ஒருவர் இப்படிச் செய்தார் என்றால், இதற்கு ஏதேனும் காரணம் இருக்கவேண்டுமல்லவா ? ஆகவே, இளவிச்சிக்கோ புலவர் பெருமானை நோக்கி, “புலமை மிக்கீர்! இளங்கண்டீரக்கோவும் யானும் ஒருங்கே வீற்றிருத்தலைக் கண்டும், அவனை மட்டும் புல்லி, என்னைப் புல்லாது விடுத்தீரே, இதற்கு ஏதேனும் காரணம் உளதோ?” என உசாவினன். பெருந்தலைச் சாத்தனார் உள்ளதை உள்ளவாறு உரைக்கும் இயல்பினர். உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் குணமுடையர் அல்லர். ஆகவே, புலவர் இளவிச்சிக்கோவைப் பார்த்து, "இளவிச்சிக்கோ! இவ்விளங்கண்டீரக்கோ, கண்டீரக் கோவின் இளவல். அக்கண்டீரக்கோ எத்தகையவன் எனில், தான் இல்லாத காலத்திலும் அவனது வாழ்க்கைத் துணைவியார் தம்மை அடைந்து கேட்கும் இரவலர்களின் பெண்டிர்கட்குப் பெண்யானைகளை நன் கனம் பொன்னணி பூட்டி ஈயும் கடப்பாடு உடையவர். அவ்வில்லக்கிழத்தியாரே அத்துணை ஈகைப் பண்பு வாய்ந்தவராயின், அவருடைய கொழுநனான கண்டீரக்கோப்பெருநள்ளி எத்துணை ஈகைப் பண்பு வாய்ந்தவனாக இருப்பான் என்பதை நீயே உணர்ந்துகொள். அத்தகைய மரபினனான நள்ளியின் இளவலாக இளங்கண்டீரக்கோ இருந்தமையால், என் மார்பகம் ஞெமுங்கப் புல்லினேன். நீயோ, “பரிசிலர் வருவர், வந்து ஏதேனும் கேட்பர். அவர்கட்கு ஈயவேண்டுமே” என்பதைக் கடுப்