பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

மடமைப்படுதலாம். அஃதாவது அறியாமையுறுதல் என்பதே நேரிய பொருளாகக் கொள்க. இங்ஙனம் அறியாமைப்பட்டவர்கள் பலராக இருப்பினும், இலக்கியங்களில் எடுத்துக்காட்டாக அமைந்தவர் இருவர். அவர்களே பாரியும் பேகனும் ஆவர், இவ்வுண்மையை ஐயனாரிதனார் இயற்றிய புறப்பொருள் வெண்பா மாலையில் உள்ள,

முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
எல்லைநீர் ஞாலத் திசைவிளங்கத் - தொல்லை
இரவாமல் எந்த இறைவர்போல் நீயும்
கரவாமல் ஈகை கடன்.

என்னும் வெண்பாவால் அறியலாம். இவர்களுள் பாரியின் வரவாறு முதற்கண் கூறப்பட்டது. இங்குப் பேகனது வரலாற்றை வரைந்து காட்டுவோமாக.


பேகன் பரம்பரை

வையாவிக் கோப்பெரும் பேகன் சேரர் குடியின் தொடர்புடையவன். இவன் குடி முதல்வன் வேளாவிக் கோமான். சேரன் செங்குட்டுவனது மாற்றாந்தாயின் தந்தையாவான். அஃதாவது சேரன் செங்குட்டுவனுக்குப் பாட்டன் முறையினன். இவன் பொதினிமலைக்குரிய ஆவியர் குலத்தில் தோன்றியவன். பொதினி மலை என்பது இப்பொழுது சீரும் சிறப்பும் பேரும்புகழும் பெற்றுவிளங்கும் பழனி மலையாகும். ஆவியர்குடி தோன்றல்களால் ஆட்சி புரியப்பட்டுவந்தமையால், இப்பழனித் திருப்பதி ஆவினன்குடி என்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆவியர் குடியில் தோன்றியவனே வையாவிக்கோப்