பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுத் திருப்பதிகள் 79 'நம்பி’ என்ற திருநாமம் நம்மாழ்வரால் எம்பெருமானுக் குச் சூட்டப்பட்டது என்பது, நம்பி, யைத்தென் குறுங்குடி கின்றஅச் செம்பொ னேதிக மும்திரு மூர்த்தியை -(திருவாய் 1, 10 :9) என்ற திருவாய்மொழித் தொடரால் அறியப்படும். இத் தலத்து எம்பெருமானைப்பற்றிய திருவாய்மொழி நாயகி வாக்காக-உருவெளித் தோற்றமாக (5. 5) நடைபெறு கின்றது. எம்பெருமான் பராங்குச நாயகிக்கு உருவெளித் தோற்றமாகச் சேவை சாதிக்கின்றான். இக்காட்சியைக் கண்ட ஆழ்வார் நாயகி அப்பெருமானைப்பற்றிப் பேசுதல், புலம்புதல் முதலியன செய்கின்றாள். இதனைக் கண்ட அன்னையரும் தோழியரும் தலைவன் திறத்தில் எவ்வளவு காதல் பெருகினும் அவன் வரும்வரை ஆற்றியிருத்தலே மகளிர் கடமையாகும் என்றும், அவளது செயல்கள் தம் குடிக்குத் தகாதவை என்றும் கூறி விலக்குகின்றனர். அவர் கட்கு விடை கூறும் முறையில் இத்திருவாய்மொழி (5. 5.) 'மகள்.பாசுரமாக நடைபெறுகின்றது. ஆழ்வார் நாயகி பேசுகின்றாள்: 'அன்னைமீர், என்னை நீங்கள் சீறுவது எதற்கு? சீறும் பயனென்? வேண்டுமானால் 'நம்பி’ என்பது. எல்லோராலும் விரும்பப்படுயவன் ஒன்பது பொருள். நம்பி என்பதற்கு பெருமை, செல்வம், குணம் முதலிய எல்லாம் நிறையப் பெற்றவன் எனப் பொருள் கூறுவர் வியாக்கிய்ான ஆசிரியர். எல்லாக் குணங்களும் நிரம்பப் பெற்றவன்-பரிபூரணன்-என்ற பொருளில் வரும் இச்சொல் பரமபதத்திலுள்ளவனுக்குப் பொருந்து மாயினும் அங்கு எம்பெருமானைக் காட்டிலும் குறைந்தாரின்மையால் வாத்சல்யம், செளசீல்யம், முதலிய எண்ணில் பல் குணங்கள் பகல் விளக்குப் போல பயன்படாமல் கிடக்கின்றன. அத்திருக் குணங்கள் யாவும் இருட்டறையில் விளக்குப்போல் அர்ச்சாவதாரங்களில் நன்கு ஒளிர்கின்ற ன.