பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 சடகோபன் செந்தமிழ் விட்டுத் தாம் கைவீசிக் கொண்டு போகா நின்றார்களே. அவர்களுடைய திருமேனி அவ்வளவு மென்மையதானால் எம்பெருமானுடைய திருமேனியின் மென்மை வாயினால் வருணிக்க முடியுமா? திருவாழி திருச்சங்கு முதலான திவ்வியாயுதங்களைத் தாம் சுமக்கலாமோ? அவற்றைச் சுமக்க ஆள் வைத்துக் கொள்ள வேண்டாவோ?’ என்ற எண்ணம் ஆழ்வார் மனதில் ஒடுகின்றது, திருநகரித் திருத்தெருவிலே போவோரும் வருவோரு மான வழிப்போக்கர்களுண்டே. அவர்கள் சம்சாரிகளாய்த் தங்கள் தங்கள் காரியங்களுக்காகப் போவதும் வருவதுமாக இருந்தாலும், ஆழ்வார் எண்ணம் வேறுவிதமாக உள்ளது. திருவண்பரிசாரம் சேவிக்கப் போகின்றார்கள். சேவித்து மீளுகின்றார்கள் என்றே இவர் நினைக்கின்றார். தம்மை அழைக்க வருகின்றார்கள் என்று இவர் நினைத்தவாறு ஒருவரும் இவரருகில் வந்தார் இலர், 'இவர்கள் திருவண் பரிசாரத் தெம்பெருமானிடத்திலே நம்மைப் பற்றிச் சொல்ல வில்லை போலும் என்று அறுதியிட்டு திருவாழ் மார்பர்க்கு என் திறம்சொல்லார் செய்வதென்? என்கின்றார்.ஆழ்வாரது விருப்பம் யாதெனில், உதவி ஆள் ஒருவரும் இல்லாதிருக் கின்ற இந்த சம்சார மண்டலத்திலே சங்கு சக்கரங்களைச் சுமந்து கொண்டு உம்மோடே ஒரு பக்கத்திலே கூடவே திரியும்படியாக ஒருவன் திருநகரியிலே திருப்புளியடியிலே உளன் என்று சொல்ல வேண்டுமாம், ஒரு பாடுழல்வான்' என்கின்றாரே, ஒரு பக்கத்திற்கு ஆழ்வாரானால் மற்றொரு பக்கத்திற்கு ஆர்? என்ற கேள்வி பிறக்குமே என்பதற்கு நம்பிள்ளையின் அருளிச் செயல் ஒரு பார்சவத்துக்கு இளையபெருமாள் உண்டிறே' என்று ஒர் அடியான் என்றது 'பயன் கருதாத் தாசன் என்றபடி,