பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைநாட்டுத் திருப்பதிகள் 85 2. நமக்கு, திருவாட்டாறு ": இத்திருப்பதியை நம்மாழ்வார் திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலார் சேர்விடம்தண் வாட்டாறு -திருவாய், 10, 6 : 9 (திகழ்கின்ற - விளங்குகின்ற; திருமங்கை - பெரிய பிராட்டியார்; திருமாலார் - இலக்குமி நாதன்! 2. திருவாட்டாறு : இதுவும் ஒரு மலைநாட்டுத் திருப்பதி. நர்கர் கோயிலிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் நெடுஞ்சாலையில்பதின்ாறு கில் தொலைவி இலுள்ளது. இத்திருத்தலம். நாகர் கோயிலிலிருந்து அடிக்கடி பேருந்து வசதி உண்டு. ஆறும் அதன் கால்வாய்களும் ஊரைச் சூழ்ந்திருப்பதால் திருவட் டாது-திருவாட்டாறு என்ற பெயர் ஏற்பட்டிருக்க லாம் என்று ஊகம் செய்ய முடிகின்றது. கோயில் சிறிய கோயிலே; உயரமான இடத்தில் அமைந் துள்ளது. ஆயினும் அது பெரிய மதிற் சுவரால் சூழப் பெற்ற பெரும்ப்ரப்பான இடத்தில் அமைந்துள்ளது. வெயில், மழை என்று பாராம்ல் எல்லாக் காலங் களிலும் கோவிலை வலம் வருவதற்கு கல்பரவப் பெற்ற நடைபாதையும் அப்பாதையின் மீது கூடாரம் போன்ற அமைப்பும் உள்ளன. பாதை மிகவும் அகலமான்து. எம்பெருமான் வாகனங்களில் உலாப் போவதற்குப் போதுமானது. இருபுறங் களிலும் ஆயிரக்கண்க்கான பித்தளை விளக்குகள் அமைக்கப் பெற்றுள்ளன. நடைபாதைக் கூரையிலும் பல்வேறு விதமான வண்ண விளக்குகள் தொங்கு கின்றன. விழாக்காவங்களில் இவை எரியவிடப் பெறும். எம்பெருமான் : ஆதிகேசவப் பெருமாள். தாயார் : மரகதவல்லி, மேற்கு நோக்கிய திருமுக மண்டலம். ஆதிசேடன் மீது கிடந்த திருக்கோலம். நம்மாழ்வார் ஒருவரே இந்த எம்பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளார்,