பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைநாட்டுத் திருப்பதிகள் 109 என் அரங்கத்து இன்னழுதர் குழல்அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில் எழுகமலப் பூஅழகர் -நாச் திரு, 11: 2 என்று ஆண்டாள் கூறி அநுபவித்ததையும் நினைந்து பார்க் சின்றோம். மேலும் இங்கு பர வியூக விபவம் இவற்றிற்குரிய திருநாமங்களையும் சொல்லாமல், அல்லாத உகந்தருளின திவ்விய தேசங்களில் நிற்கின்றவர்களின் பெயர்களையும் சொல்லாமல் குட்டநாட்டுத் திருப்புலியூர் எம்பெருமானு லடய திருநாமங்களையே வாய்வெருவா நிற்கின்றாள் என்பது தோன்ற திருப்புலியூர் அருமாயன் பேரன்றிப் பேச்சிலள்’ என்கின்றாள். அவள் நிலை தனக்கு அப்போது தான் தெரியும் என்பது தோன்ற அன்னைமீர் இதற்கு என் செய்வேன்' என்கின்றாள். அடுத்து வரும் இரண்டு திருப் பதிகளை (10, 11) ஒரே தடவையில் சேவிக்க வேண்டும். 49. திருக்காட்கரை", பேருந்தில் செல்லும்போது சாலைக்கு இருமருங்கும் உள்ள தோப்புகள், சோலைகள், 20. இதற்கு மேல் இத்திருவாய்மொழியின் விளக்கம் வேண்டுவோர் மலைநாட்டுத் திருப்புதிகள்’ (கட்டுரை - 9) காண்க. - . - 21. திருக்ாட்கரை கேரளத்தில் தென் இந்திய இருப்பூர்தி வழியில் எர்ணாகுளம் என்ற நிலையத் திலிருந்து சுமார் 10 கல் தொலைவிலுள்ளது இந்தத் திவ்வியத் தேசம். அங்குப் போய்த் திரும்ப பேருந்து வசதி உண்டு. சாலையின் மேலேயே இவ்வூர் அமைந்துள்ளது. சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் தாழ்ந்த மதிற்கவர்களால் சூழப் பெற்ற இடத்தில் அமைக்கப் பெற்றுள்ளது இத் திருக்கோயில். மிகவும் சிறிய கோயில்தான். எம்பெருமான் திருக்காட்கரை அப்பன். தாயார் : பெருஞ்செல்வநாயகி, வாத்சல்யவல்லி, நின்ற திருக் கோலம். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்.