பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாட்டுத் திருப்பதிகள் $33. புருஷகாரமாகக் கொண்டு திருவேங்க முடையான் திருவடி களில் இங்ஙனம் சரணம் அடைகின்றார். அகல ക്ലാ இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா! கிகளில் புகழாய் உலகம்மூன் றுடையாய்! என்னை ஆள்வானே! கிகளில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே! புகல்ஒன் றில்லா அடியேன்உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே (10)" (இறையும் - கணமும் நிகர்-ஒப்பு: அமரர் - தேவர் கள்; புகல் ஒன்று இல்லா - வேறு வழி ஒன்றும் அற்ற) - இந்தப்பாசுரத்தைக்கொண்டுதுவையம்மந்திரத்தின் பூரீமங்காராயண சராணனெள சரணம் பிரபத்யே! என்ற முதல் வாக்கியத்தை விளக்குவர். அலர்மேல் மங்கை என்கையாலே பூர் என்ற சொல்லின் பொருளும், அகலகில்லேன்' என்கையாலே மத்’ என்ற சொல்வின் பொருளும், உறை மார்பா' என் கையாலே நித்தியயோகமும் (சேர்க்கை), நிகரில் புகழாய் என்றது முதல் திருவேங்கடத்தானே’ என்பதுவரை 'நாராயண' என்ற சொல்லின் பொருளும், "புகல் ஒன்று இல்லா அடியேன்” என் கையாலே உத்தமன் (உத்தமன்-தன்மையிடம்) போதருகின்ற அதிகாரியும், "உன் அடிக்கீழ் என் கையாலே ச்ரனெள’ என்ற சொல்லின் பொருளும், 'அமர்ந்து புகுந்தேனே' என்கையாலே பிரபத்யே’ என்ற சொல்லின் பொருளும் கூறியுள்ளதைத் தெரிவித்தபடி, சரணம்’ என்ற சொல்லின் பொருளைத் தெரிவிக்கும் பதம் திருப்பாசுரத்தில் இல்லையே எனின், புகுந்தேன்' என்றதனால் சேரணம்’ என்ற சொல் கோல் விழுக்காட்டாலே வருவது ஒன்றாதலின் தனியே கூறிற்றிலர் என்க.