பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#34 சடகோபன் செ ந்தமிழ் பிராட்டியின் புருஷகார பலத்தாலே தலையெடுக்கும் ஆறு குணங்களுள் (மூமுட்சுப்படி-135) தான்கைச் சொல்லுகிறது இப்பாசுரம். நிகரில் புகழாய்' என்பதனால் வாத்சல் யத்தை'யும், உலகம் மூன்றுடையாய்” sri೬ಹಣTು ‘சுவாமித்வத்தை'யும், ‘என்னை ஆள்வானே என்பதனால் 'செளசீல்யத்தை'யும், திருவேங்கடத்தானே என்பதனால் செளலப்பியத்தை'யும் தெரிவிக்கின்றார் ஆழ்வார். முமுட்சுப்படி-137)". -- - - - w. 2. துவரை : மாசறு சோதி (5.3) என்று தொடங்கும் கடலுயிர்தல் துறையிலமைந்த பதிகம் ஒன்றில் 8. இந்தப் பாசுரத்தின் விரிவான பொருளை ஈட்டின்జ్ఞతుశి074 தொகுதி பக்கம் 489-527 கண்டு தளிக, 9. இவரை துவாரகை என்பது முத்திதரும் நகரங் கன் ஏழினுள் ஒன்று. இது மேற்கிந்திய இருப்பூர்தி வழியில் ஜாம்நகருக்கும் ஒக்க விற்கும் இடையி அள்ள ஓர் இருப்பூர்தி நிலையம் (இஜராத் மாநிலம்), ஒக்காவிலிருந்து 18 கல் தொலைவி லுள்ளது. நிலையத்தில் டோங்கா என்ற குதிரை ஆண்டி கிடைக்கும், அதன்மூலம் நகருக்குச் செல்லலாம், இங்குத் தங்குவதற்கு இராமர்துசக் கூடம் உண்டு. கிருட்டினன் கோயில் கோமுகிநதி கடலொடு கலக்குமிடத்தில் உள்ளது. இந்த இடத் தில் நீராடுதலுக்கு ஒரு சிறிய கட்டணம் செலுத்து தல் வேண்டும். நீராடி ஈர ஆடையுடன் கண்ணனைச் சேவிப்பது வழக்கமாக இருந்து வருகின்றது. கண்ணனை மிக அருகில் நின்று சேவிப்பதற்கும் ஒரு கட்டணம் உண்டு. இந்த மூர்த்தி நின்ற திருக்கோலத்தில் உள்ளது. குசேலர் வரலாற்றுத் தொடர்புடையது இத்திருத்தலம். கண்ணன் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த துவாரகை கடலில் மூழ்கிவிட்டது. துவாரகை என்பது அகன்ற துவாரத்தையுடையது என்று பொருள்படும்.(இந்த ஊரைப் பார்க்க 1978-மே-யில் முயன்றபோது,பம்பாய் வரை சென்று திரும்பினேன். ஆமதாபாத்திற்குப் பயணச்சீட்டுகிடைக்கவில்லை).