பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாட்டுத் திருப்பதிகள் #51 இடப்பக்கத்திலும் இருப்பர். இவனை அநந்தன், கருடன், விஷ்வச்சேனர் முதலான நித்தியசூரிகளும், இவ்வுலகத் தளைகளினின்றும் விடுபட்ட முக்தரும் அநுபவித்தற்கு உரியனாய் இருப்பன். - இந்த எம்பெருமான் சத்தியம், ஞானம், ஆனந்தம், அனந்தம் இவற்றின் சொரூபமாக இருப்பவன். இடத்தாலும் காலத்தாலும் அளவிடப்பெறாதவன்; எங்கும் நிறைந் திருப்பவன். மூன்றுவித சேதன அசேதன பரிணாம ரூபமான வேறுபாட்டின் குறைகள் (விகார தோஷங்கள்) தட்டாதவன்; அறம்பொருள் இன்பம் வீடு என்ற நான்கு வகைப்பட்ட பலன்களையும் உயிர்கட்கு நல்கி அவற்றின் புகலிடமாக இருப்பவன். தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன். ஞானம், சக்தி, பலம், ஐசுவரியம், வீரியம், தேஜஸ் முதலிய மங்கள குணக் கூட்டங்களால் அலங்கரிக்கப் பெற்றவன். அவனிடம் இக்குணங்கள் ஆதல் அழிதல் இன்றி எப்பொழுதும் நிறைந்திருக்கும். இவற்றைத் தவிர் வாத்சல்யம், செளசீல்யம் செளலப்பியம் முதலிய எண்ணற்ற குணங்களை யும் கொண்டவன். இவ்வுலகைப் - படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றின் காரணபூதன். சிறார் வீடு கட்டி அழிக்குமாப் போலே இவையாவும் இவனுக்குத் தன் இச்சை யாலே உண்டாகும் கேவல விளையாட்டேயாகும். பருவுட லுடன் பரமபதத்தை அடைய முடியாததால் இந்த எம்பெருமானை மானசீகமாகத்தான் சேவிக்கவேண்டும். இவன் தெற்கு நோக்கிய திருமுக மண்டலம்கொண்டு இருந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றான். தாயார் பெரிய பிராட்டியார். இந்தப் பெருமானை நம்மாழ்வார் விண்ணைத் தொழுது அவன் மேவு வைகுந்தன் என்று கைகாட்டும். (திருவாய் 4.4 : 1), சேணுயர் வானத்து இருக்கும் தேவ பிரான் (5.3:9), விண்மீது இருப்பாய் (6.9 : 5), அடையும்