பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 சடகோயின் செந்தமிழ் வ ளம்கிளர் மூவுல குண்டுமிழ் தேவபிரான் பேர்வ ளம்கிளர்ந் தன்றிப் பேச்சிள்ை இன்றுஇப் புனையிழையே (4) இத்தலத்து எம்பெருமானின் ஆபத்தில் தோழன்' என்றிருக்கும் திருக்குணத்தில் ஈடுபட்டு அவன் பிரளய காலத்தில் எல்லா உலகங்களையும் தன் திருவயிற்றில் வைத்துப் படைப்புக் காலத்தில் அவற்றை வெளிநாடு காண உமிழ்ந்த அற்புதச் செயலையும் பேசுகின்றாள். இவற்றை யெல்லாம் சொல்லும்போது இவளுடைய வடிவு ஆபரணம் பூண்டாற் போன்று விளங்கும் அழகு சொல்லுந்தரமன்று” என்று குறிப்பிடுகின்றாள். இதனாலும் இத்தலத்து எம்பெரு மானுடன் கலவி நேர்ந்திருக்க வேண்டும்போல் தோன்று வதை ஊகிக்க வேண்டும் என்கின்றாள் தோழி. இன்னும் இத்தலத்து எம்பெருமானுடன் புணர்ச்சி நடைபெற்றிருத்தல் கூடும் என்பதற்குச் சான்றுகளையும் காட்டத் தொடங்குகின்றாள். புனையிழைகள் அணியும் ஆடை அடையும் புதுக்க ணிப்பும் கினையும் கீர்மைய தன்றிவட்கிது கின்று கினைக்கப் புக்கால் சுனையி னுள்தடக் தாமரை மலரும் தண்திருப் புலியூர் முனைவன் மூவுல காளி அப்பன் திருவருள் மூழ்கினளே (5) (புனை - பூணுதல்; புதுக்கணிப்பு - வடிவில் பிறந்த புதுமை; முனைவன் - முன்னோன்: ஆளி . ஆள்பவன்)