பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 சடகோபன் செந்தமிழ் இங்ங்னம் அநுசரித்துத் தரிக்கும்விதம் ஆண்டாளிடத் திலும் கண்டதுண்டு அல்லவா? நோன்பு நோற்பதாகக் கொண்டு திருப்பாவை பாடியது ஆய்ச்சியர்களின் அநுட் டானத்தை அதுகரித்த படியத்தனையிறே. ஆழ்வாருக்கு இந்த அநுகாரப்ரகாரமே இத்திருவாய்மொழியில் (3.6) செல்லநின்றது. அதுதானும் தாய்ப்பாசுரத்திலே வெளிப்படு கின்றது, மகளின் அநுகாரத்தைத் தாய்முறையிடுகின்றாள். பராங்குச நாயகி ஞானமுத்திரையும் தானுமாய் தோசாரியனைப் போலே தன்னைப் பாவித்துக் கொண்டு கடல் ஞாலம் செய்தேனும் யானே, கடல் ஞாலம் ஆவேனும் நானே, மலை எடுத்தவனும் யானே...' என்றாற். போலப் பாசுரங்களைச் சொல்லிக் கொண்டு இருக்கக் கண்ட திருத்தாயார் இஃது என்ன நிலைமை? என்று ஆராயத் தொடங்கினாள், எம்பெருமானைப் பிரிந்ததனால் உண்டான ஆற்றாமையினாலே அநுகரித்துத் தரிக்கின்றாள் என்று அறிய மாட்டாதவளாய்க் கலங்கிக் கிடந்தாள், அப்போது சில உறவினர்கள் அங்கே வந்து சேர்ந்து இஃது என்? என்று வினவ, சர்வேசுவரன் இவள் பக்கலிலே ஆவேசித்தான்போலே இருக்கின்றது என்று விடை கூறுகிற, படியாய் இத்திருவாய்மொழி நடைபெறுகின்றது. இதில் ஒரு பாசுரத்தைப் பார்ப்போம். "இனவேய்மலை யேந்தினேன் யானே' என்னும் 'இனஏறுகள் செற்றேனும் யானே' என்னும்: "இனஆன்கன்று மேய்த்தேனும் யானே’ என்னும். "இன.ஆகிரை காத்தேனும் யானே' என்னும்: "இனஆயர் தலைவலும் யானே' என்னும்: இனத்தேவர் தலைவன்வந் தேறக் கொலோ? இனவேற்கண் கல்லீர்க் கிவைஎன் சொல்லுகேன் இனவேற் கண்ணி யென்மகள் உற்றனவே? (6) (இனவேய் - திரள்திரளான மூங்கில்கள்; மலை -