பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 சடகோபன் செந்தமிழ் திருமணத் துணுக்குள்ளே பொகட்டுப் பற்றிலார் பற்ற நிற்றல் முதலிய அவனுடைய குணங்களை விண்ணப்பம் செய்யா நின்று கொண்டு ஒரு காலநியதியாதல் ஒரு 35 நியதியாதல் அதிகாரி நியதியாதல் இன்றிக்கே 5ುಡಿಖFಠ சென்று பற்றலாம் படி இருக்கின்ற படியை நினைத்து, தன் பெண் பிள்ளையினுடையத் திருவுள்ளத்திலே படுத்து கின்றாள் இத்திருவாய்மொழியிலே.” . பட்டர் இத்திருவாய்மொழி அருளிச் செய்யும்போ தெல்லாம் ஆழ்வாருக்கு ஓடுகிற நிலையறியாதே அவருடைய உள்ளக்கிடக்கையும் இன்றிக்கே இருக்கிற நாம் என்சொல்லு கின்றோம்?" என்று திருமுடியிலே கையை வைத்துக் கொண்டிருப்பர்.” கங்குலும் பகலும் கண்துயில் அறியாள்: கண்ணநீர் கைகளால் இறைக்கும்; சங்குசக் கரங்கள் என்றுகை கூப்பும்; தாமரைக் கண்என்றே தளரும்; எங்ங்னே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும்; இருகிலம் கைதுழா இருக்கும்; செங்கயல் பாய்மீள்த் திருவரங்கத்தாய்! இவள்திறத் தென்செய்கின் றாயே (1) (கங்குல் - இரவு; துயில் உறக்கம்; கண்ணநீர் - கண்ணிர். தரிக்கேன் - தரிக்க முடியேன்: இருநிலம் . பெரிய நிலம்) . . . . . என்பது முதல் பாசுரம், இதில் பேச்சுக்கு நிலமல்லாதபடி தன் மகளுக்குண்டாயிருக்கின்ற நிலைமையைப் பெரிய பெருமாளுக்கு அறிவித்து இவள் விஷயமாக நீர் செய்தருள 10. மணத்துரண் : அழகிய மணவாளன் சந்நிதியில் கருவறைக் கருகிலுள்ள இரண்டு துர்ண்களுக்குத் "திருமணத்துரண்' என்பது சம்பிரதாயத்திருநாமம்.