பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 சடகோபன் செந்தமிழ் அழிவில்லையன்றோ?' தாமான தன்மையில் அடிதொழுது எழு (திருவாய் 1.1 : 1) என்பர்; பரோபதேசத்தில் திண்கழல்சேர் (1.2 10) என்பர் தூதுவிடப் புக்கால் :திருவடிக்கீழ்க் குற்றேவல்’ (1.4 : 2) என்பர்; பிறரைச் சொல்லப்புக்கால், 'தாட்பட்ட தண்துழாய்த் தாமம் காமுற்றாயே (2.1:2) என்பர்; கலங்கி மடல் எடுக்கு மளவானாலும்,தலையில் வணங்கவுமாங்கொலோ (5.3 7) என்பர்; பித்தேறிச் சொல்லும் போதும் கண்ணன் கழல்கள் விரும்புமே (4.4 : 8) என்னுதல் ஏறியபித்தினோடு எல்லா உலகும் கண்ணன் படைப்பு (4.4 : 7) என்னுதல் சொல்வார் இத்தனை. 7. மின்னிடை மடவார்கள்’ (6.2) : பிரதிவாதி பயங் கரம் அண்ணங்காசாரிய சுவாமிகள் தமது திவ்வியார்த்த தீபிகையில் இந்தத் திருவாய்மொழியின் அவதாரினையில் கூறுவது : ஆழ்வாரின் தன்மை பல வகைப்பட்டிருக்கும். இந்தத் திருவாய்மொழியின் தன்மை மிகச் சிறப்பாக இருக்கும். என்றும் ஒரு நாள் ஒழியாமை யானிரந்தால் ஒன்றும் இரங்கார் உருக்காட்டார் ( ) என்றும், ஒரு நாள் காணவாராயே (8.5:1) என்றும் இங்கனே பலகாலும் கூப்பிடா நின்ற ஆழ்வாருக்கு இப்பொழுது உண்டான நிலைமை மிக வேறு பட்டிரா நின்றது. எம்பெருமான் வந்து நிற்க, "இங்கே எதுக்கு வந்தாய்? உனது அந்தரங்க விருப் பத்திற்கு இலக்கானவர்கள் பக்கவிலே எழுந்தருளலாம்: இங்கே என்ன காரியமிருக்கின்றது? கடுகச் செல்வாயாக' என்று கதவடைத்துத் தள்ளுபடியாயிருக்கின்றது. இத்திரு மொழி. வடமொழியில் பிரணயகலகம் என்றும், தென் மொழியில் ஊடல் என்றும் சொல்லப்படுவது இது. தம்பதிகள் பரிமாறா நின்றால் இங்ஙனம் பிர்ணய கலகம் நிகழ்ந்தே தீரும். جی. تهم ... ... . . . . 11. பண்டம் - மண்தொகுதி, கடம் - குடம். கபாலம் - ஒடு. சூர்ணம் - துள்ள்.