பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள்-தூதுபற்றியவை 301 என்ற பாசுரத்தில் விதி' என்பதற்குச் சாத்திரவிதி' என்றும் பாக்கியம் என்றும் இரண்டு விதமாகப் பொருளுரைப்பர். பின்னதே சிறந்தது. இதனையொட்டி நம்பிள்ளை ஈடு காண்மின் : 'பெருமாள் பிராட்டியைப் பிரிந்து கடலும் மலையும் அரித்துக் கொண்டு வாரா நிற்கச் செய்தே இராஜ்ய காரங்களை இழந்து கிடந்த மகாராஜரைக் கண்டு அவர் குறையைத் தீர்த்த பின்னரே தம் இழவில் நெஞ்சு சென்றது. அங்ங்ணன்றிக்கே, இப்போது இவை குறைவற் றிருக்கின்ற இதுதான் இவள் பாக்கியமாயிருக்குமிறே” மேல் வருவதைத் தெரிந்து கொண்டு அதற்கிணங்கக் காரியம் செய்யவல்ல சாதுர்யமே மதி”, எனப்படும்." அப்படிப்பட்ட சாதுரியத்தினால் மாண்குறள் கோல வடிவு காட்டி ய்ாசகனாயினான். அந்தக் குணத்தினால் என்னை ஈடுபடுத்தி என்னை இப்பாடுபடுத்துவதற்காகவே' என்ற ஆழ்வார் நாயகியின் கருத்து மதியினால் கள்வர்க்கு என்ற சொற்களில் கண்டு மகிழலாம். "கள்வம் என்பது முதலில் சிறிய வடிவினைக் காட்டிய பிறகு பெரிய வடிவான வஞ்சகம் என்று கூறுவர் திருமாலை ஆண்டான். ஒன்றை நினைத்து ஒன்றைச் செய்த மாயமே கள்வம் என்பதாக எம்பெரு மானார் நிர்வகிப்பர். முன்னம் குறளுருவாய் மூவடிம்.ண் கொண்டளந்த மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன்பயந்தேன் |மால் - மயக்கம்; பொன் - மாமை நிறம்) 7. மகாராஜர்-சுக்கிரீவன் (வைணவ மரபுப்படி இங்ங்ணம் வழங்குவர்} 8. கீழே கழிந்து போன விஷயத்தைப் பற்றின உணர்வு "ஸ்மிருதி' எனப்படும். மேலே வரப்போகின்ற விஷயத்தைப் பற்றின உணர்வு மதி ஆகும். அப்போதைக்கப்போது நடக்க வேண்டிய உணர்வு புத்தி' எனப்படும்; முக்காலங்களையும் பற்றின் உணர்வு "பிரஜ்ளுை' என்று வழங்கப்பெறும்.