பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 சடகோபன் செந்தமிழ் நடத்தினர் என்று தெரிவதால் இங்கு ஆழ்வார்கள் அன்னவர்களை விளிக்கின்றனர் என்று கொள்ளத் தரும். பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வாரும் 'மாம் பொழில் தளிர் கோதிய மடக்குயில் வாயது துவர்ப்பு எய்தத் தீம்பலாங்கனி' தேனது நுகர்’ (பெரி. திரு. 5. 3: 4) என்று குயில்களின் ஓர் இயல்பினை அருளிச் செய்திருப்பதை நாம் அறிவோம். முதலில் மாந்தளிரில் வாய் வைத்ததனால் வாய் துவர்த்துப் போக அந்தத் துவர்ப்பு நீங்குவதற்காகப் பலாப்பழத் தேனைப் பருகுவதாகச் சொல்லுகிற இதனால் முதலில் சாமானிய சாத்திரங்களில் வாய் வைத்துப் பிறகு சிறப்பான சாத்திரங்களில் இன்பமாகப் போதுபோக்கும் படியைச் சொல்லுவதாக அமைகின்றது. ... - “மையல் தீர்வதொரு வண்ணம் மாற்றம் கொண்டருளிர் : எம்பெருமான் பக்கலிலிருந்து ஏதேனும் ஒரு வார்த்தை கொணர்ந்து அருளினாலல்லது தன்னுடைய காதல் தீர மாட்டாது என்கின்றாள் பராங்குச நாயகி. இங்குப் பொதுவில் மாற்றம் என்றுள்ளதேயன்றி, இன்ன மாற்றம் என்று விளக்கப் பெறவில்லை; இதனால் இஃது அநுகூல மாகவோ, பிரதி கூலமாகவோ அமையலாம். அத்தலையில் ஏதேனும் ஒரு வார்த்தை கிடைத்தால் போதுமானது என்கின்றாள் பாவிகீ என்றுஒன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே (திருவாய் 4.7:3) என்றாற்போல சொன்னாலும் போதும் என்பது குறிப்பு. அடுத்து, வண்டுகளை நோக்கி, வேறு கொண்டும்மை யானிரங் தேன்;ெவறி வண்டினங்காள்! ஏறு சேவகனார்க்கென்னை யும் உளள் என்க மின்களே.(10) tவெறி - மணம்:சேவகன் வீரன், இங்கு. இரர்கன்;