பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 சடகோபன் செந்தமிழ் வல்கெஞ்சத்து இரணியனை மார்புஇடந்த வாட்டற்றான் (வாட்டற்றான். திருவட்டாறு என்ற திருத்தலத்தில் எழுந்தருளியிருப்பவன்) * - - என்றும், . . . . . . பண்ணார் பாடல் இன்கவிகள் யானாய்த் தன்னைத் தான்பாடி 'தென்னா என்னும் என் அம்மான் (10.7:5) என்றும் ஆழ்வாரே தம் திருவாக்கால் கூறுவதால் இதனை அறியலாம். திருவாய்மொழியில் ஒருபதிகம் (7.9) முழுவதி லும் இக்கருத்தினைப் பன்னிப் பன்னி உரைக்கின்றார் ஆழ்வார். - ...' . ஆம்முதல் வன்.இவன் என்றுதன் தேற்றி,என் காமுதல் வந்து புகுந்து கல்இன்கவி துரமுதல் பத்தர்க்குத் தான்தன்னைச் சொன்ன என் வாய்முதல் அப்பனை (7.93) என்றும், • , என்சொல்லால் யான்சொன்ன இன்கவி என்பித்துத் தன்சொல்லால் தான்தன்னைக் கீர்த்தித்த மாயன் (7.9.2) என்றும் கூறுவதைக் காணலாம் என்னால் தன்னை, வன்கவி பாடும் வைகுந்த நாதனே (7.9:6) என்று மீண்டும் இக் கருத்தினையே வலியுறுத்துவர். இறைவனைப்பற்றி மெய் யுணர்வு பெற்ற பெரியோர் யாவரும், எச்செயலும் இறைவன் திருவுள்ளப்படியே நிகழ்கின்றது என்பதாகவே எண்ணுவர். இங்ங்னம் இறைவன் தனக்கு அளித்த பெரும்பேற்றுக்குக் கைம்மாறாகத் தன் உயிரையே அவ் இறைவனுக்குக் காணிக்கை ஆக்கும் அதுவும் மற்று ஆங்கவன் தன்னது'