பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jū சடகோபன் செந்தமிழ் கட்கு முன்னதாகவே அருணோதயம் போல் அவதரித்தவர்; அந்தண குலத்தவர். பிறந்த நாள் சித்திரைத் திங்கள்; சித்திரை நட்சத்திரம்; வடமொழி, தென்மொழி நூல்களை யும் சாத்திரங்களையும் கற்றுத் துறைபோய வித்தகர் இவர். வடநாட்டுத் திருத்தலப் பயணத்தை மேற்கொண்ட இவர் அயோத்தி முதலிய தலங்களைச் சேவித்துக் கொண்டு பரிசுத்த பூமியாகிய அயோத்தியில் சிலகாலம் வாழ்ந்து வரலாயினர். - அக்காலத்தில் ஒரு நாள் இரவில் இவர் திருக்கோளுர் வைத்தமாநிதியைத் திசை நோக்கித் தொழக் கருதியவர் தென்திசை நோக்கிக் கண் செலுத்தினார். அப்பக்கத்தில் வானுற ஓங்கி வளர்ந்து விளங்கும் திவ்வியமான பேரொளியைக் கண்டு வியப்புற்றார். இப்பேரொளி இரண்டு மூன்று நாட்களிலும் தொடர்ந்து காணப்பெற்றது: அச்சுடர்த் திரள் முச்சுடரொளியிலும் மிக்குத் திகழ்ந்தது. தென்திசையில் ஏதோ ஒர் அதிசய நிகழ்ச்சி உள்ளது: அதனைச் சென்று காண்டல் வேண்டும்' என்று எண்ணிய மதுரகவிகள் தெற்கு நோக்கிப் பயணமானார். அன்று முதல் பகலில் உறங்குவதும் இரவில் அப்பேரொளியை நோக்கிய வண்ணம் வழி நடப்பதுமாகப் பல நாட்கள் நடந்து திருக்குருகூரை அடைந்தார். அவ்வூரை அடைந்ததும் அந்த ஒளி காணப் பெறவில்லை. அவ்வூரில் உள்ளாரிடம் "இவ்வூரில் யாதேனும் அதிய்ச் நிகழ்ச்சி உண்டோ? என்று வினவ, அவர்கள் கூறியபடி திருப்புளியாழ்வாரின் அடியில் எழுந்தருளியிருந்த சடகோடபரைக் கண்டார். ஆழ்வார் கண்விழித்துப் பார்த்தல், பேசுதல் முதலிய செயலொன்றுமின்றி மெளனமாக இருத்தலைக் கண்டவர், அவருடைய நிலையை ஆராய்ந்தறிய எண்ணினார். உடனே ஒரு சிறு கல்லை எடுத்து அவர்முன் இட்டு ஒலி உண்டாக்கி