பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருப்பதிகள் 23 திவ்விய தேசத்தை நம்மாழ்வார் 12 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். தண்ணக் துழாய்வளை கொள்வது; யாமிழப் போம்கடுவே வண்ணம் துழாவியோர் வாடை புலாவும்:வள் வாய்அலகால் புள்கங் துழாமே பொருநீர்த திருவரங் கா! அருளாய்! எண்ணங் துழாவு மிடத்துஉள வோபண்டும் இன்னன்னவே - - திருவிருத், 28 (தண் குளிர்ந்த வாடை - வடக்கிலிருந்து வீசும் காற்று: வண்ணம் - மாமைநிறம், வள்வாய் அலகுகூர்மையான வாயின்துணி; புள் - பறவை; நந்து உழாமே - சங்கைக் கொத்தாதபடி, பொரு அலை மோதும்.) - என்பது திருவிருத்தப் பாசுரம், இதில் ஆழ்வார் நாயகனைப் பிரிந்த நாயகி வாடைக்கு வருந்தி இரங்கும் பாசுரத்தாலே தமது மனவருத்தத்தை வெளியிடுகின்றார். ஆற்றாமை மிகுதியால் தலைவனை எதிரில் நிற்பது போலப் பாவித்து முன்னிலைப் படுத்திக் கூறியது இது. அன்றி, உருவெளிப் பாட்டில் கண்ட தலைவனை நோக்கி உரைத்ததுமாகவும் கொள்ளலாம். விமானம் ஓம்’ என்ற பிரவணமாகவும், நமோ நாராயணாய்' என்ற எழுத்துகள் ஏழு மதில்களா கவும் அமைந்துள்ள்தாகக் கூறுவர். 108 திருப்பதி களில் அதிகமாக ஆழ்வார் பாசுரங்கள் பெற்றவை முதல் திருப்பதியாகிய இதுவே. இத்திருத்தலம் பற்றி நம்மாழ்வார் பாடியவை பன்னிரண்டு பாசுரங்களேயாகும்.