பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருப்பதிகள் 31 இன்னும் உழல வேண்டுமோ? (10) என்று கூவிக் கூவிக் கண் பனி சோருகின்றார். இந்தப் பாசுரங்களைப் பல முறை படித்து உளங்கரைந்து பெறும் அநுபவம் அலாதியானது. (3) ஆழ்வார் மங்களாசாசனம் செய்த ஒப்பிலியப்பன் சங்கிதிக்கு வருகின்றோம். மார்க்கண்டேயர் வளர்ப்பு மகள் "பூமிப்பிராட்டியை மணப்பதற்கு எம்பெருமான் விண்ணுலகி னின்றும் வந்தபடியால் இத் திருத்தலம் திருவிண்ணகர்’ என்ற திருப்பெயர் பெற்றது. மார்க்கண்டேயரும் துளசி தேவியும் தவம் புரிந்த இடமாதலால் மார்க்கண்டேய rேத்திரம் துளசிவனம் என்ற திருநாமங்களையும் பெறு கின்றன். புராண வரலாற்றுப்படி உப்பிலியப்பன் சந்நிதி: உப்பில்லாத பண்டம் நைவேத்தியம் ஆகின்றது. 'தன் ஒப்பார் இல் அப்பன் (திருவாய். 6. 3; 9) என்று நம்மாழ்வார் மங்களா சாசனப்படி இத்திருத்தலம் ஒப்பிலியப்பன் சந்நிதி என்று திருநாமம் பெறுகின்றது. திருமங்கை யாழ்வார் இத் தலத்து எம்பெருமானை விண்ணகருள் பொன் மலை’ என்று உருவகித்து மகிழ்கின்றார், - 8. திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன்சக்கிதி) இது கும்ப கோணத்திலிருந்து ஆறு கி.மீ.தொலைவு. குடந்தை யிலிருந்து அடிக்கடி நகரப் பேருந்து வசதி உண்டு. தொல்ைவிலுள்ள சில ஊர்கட்குப்போகும் பேருந்து களும் இச்சந்நிதி வழியாகச் செல்லும், நாகேஸ்வர இருப்பூர்தி நிலைய்த்திலிருந்தும் இச்சந்நிதியை அடையல்ாம்;இங்கிருந்து மூன்று கி. மீ. தொலைவு. ஒருசிறு பயணிகள் விடுதி இங்கு உண்டு. நல்ல உணவு விடுதிகள் இல்லை. எனவே, புதிதாக வருபவர்கள் கும்பகோன்த்தில் நல்ல விடுதியொன்றில் தங்கிக் கொண்டு இத்திருத்தலச் சேவைக்குப் போதல் சிறந்தது. Jo 9. இச்சந்நிஇபற்றிய முழுவரலாற்ஜ42-இல் iானியரின் சோழ நாட்டுத் திருப்திகள் இரண்டாம் பகுதி (10 ஆம் கட்டுரை) காண்க.