பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சடகோபன் செந்தமிழ் 3 2 திருவிண்ணக எம்பெருமானை அதுபவிக்கும் திரு மங்கையாழ்வார் திருநறையூர்த் தேனே' (பெரி. திரு 6.3:3) என்று கூறுகின்றார். இதற்குப் பொருள் கூறும் பராசர பட்டர், "திருநறையூர் பெருக்குக்குச் சினையாறு படுகின்றது கிடாய்” என்று அருளிச் செய்வர் என்பது பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்கியான பூரி சூக்தி, இதன் அழகிய கருத்து அறிந்து கொண்டு மகிழ வேண்டும். திருவிண்ணகர்த் இருப்பதிபற்றிய இத்திருமொழி முடிந்தவுடனே பத்துத் இருமொழிகளால் (100 திருப்பாசுரங்களால்) திருநறையூரை அநுபவிக்கப் போகின்றார் ஆழ்வார். ஆற்றில் பெரு வெள்ளம் வரப் போவதற்கு முன்னே ஆறு பொசிந்து காட்டுவது வழக்கம். அதுபோல 100 பாசுரங்களால் திருநறையூர்த் திருப்பதி அநுபவமாகின்ற பெருவெள்ளம் அண்மையில் இருப்பதனால் அதற்கு முன்னடையாளமாகத் "திருநறையூர்த் தேனே! என்று இவ்வாறு பொசிந்து காட்டு கின்றது என்பதாகும். - * நம்மாழ்வார் திருவிண்ணகர்ப்பனை அநுபவிப்பதை நாமும் அநுபவிக்க ஆயத்தமாகின்றோம். ஆழ்வார் எம் பெருமானின் பரத்துவத்தை அர்ச்சையில் காண்கின்றார்." உலகில் தம்மில்தாம் சேராத மாறுபட்ட பொருள் கள் யாவற்றிலும் எம்பெருமான் அந்தர் யாமியாய்ச் சேர்ந்திருக்கும் படியைக் கண்டு மகிழ்கின்றார்; வியக் கின்றார். 'வறுமை - செல்வம், நரகம் - கவர்க்கம், பகை - நட்பு, நஞ்சு அமுது, என்று ஒன்றோடொன்று பொருந்தாத பொருள்களாய் விரிந்திருக்கும் எம்பெருமான் என்னை அகப்படுத்திக் கொள்ளவே இங்ஙனம் இருக் கின்றார். ஒருவனை அகப்படுத்த நினைத்தார் ஊரை வளையு மாறு போலே (1): இன்பம் - துன்பம் கலக்கம் . 10. திருவாய் 6, 3,